fbpx

அச்சுறுத்தும் அஜினமோட்டோவுக்கு ஒரு பாரம்பரிய தீர்வு

July 19, 20200
Ajinomoto.jpg

உணவு  என்றாலே அது  வீட்டில்  மட்டுமே  என்ற  காலம்  போய்  இன்றைய வேகமான  உலகில்  வேலைப்பளுவின்  காரணமாக  கிடைத்த  நேரத்தில் கிடைக்கின்ற  உணவை  உண்டு,  அது  ஆரோக்கிய  உணவா?  இல்லையா?  என்ற  விழிப்புணர்வு கூட இல்லாமல்  இருக்கிறோம்.

அஜினமோட்டோ என்றழைக்கப்படும்  மோனோ சோடியம்  குளூட்டமேட்  நாம் வெளியில்  சென்று  சாப்பிடும்  உணவுகளில்  கலந்திருக்கும் முக்கியமான ஒன்றாகும். முந்தைய  காலங்களில்  இந்த அஜினமோட்டோ சைனீஸ்  உணவுகளில்  மட்டுமே  கலந்திருக்கும்.  ஆனால், தற்போது அஜினமோட்டோ கலக்காத  உணவுகளே  இல்லை  என்ற  நிலைக்கு வந்துவிட்டது.

இன்றைய  வேகமான  உலகில், பணிக்கு  செல்லும்  அவசரத்தில்  வீட்டில் உணவை  எடுத்துக்கொள்ளாமல், வெளியில் உணவை வாங்கி சாப்பிடுகிறோம்.  ஆனால்,  வெளியில்  உண்ணும்  உணவில் சுவை தரக்கூடிய  பல  இரசாயன  பொருட்கள் மற்றும்  வேதிப்  பொருட்களை சேர்கின்றனர். இவை நமக்கு  அந்நேரத்தில் சுவை கொடுத்தாலும்,  பின்னர்  நமது  உடலில்  பல பாதிப்புகளை  உண்டாகும்.

பதறவைக்கும் அஜினமோட்டோ

மேலும் ஒரு ஆராய்ச்சியில், அஜினமோட்டோ கலந்த உணவை கருவுற்ற எலிக்கு தொடர்ந்து கொடுத்து வந்ததால் அதன் குட்டிகளுக்கு மூளையில் உள்ள செல்கள் அளவில் சுருங்கி உள்ளதை மருத்துவர்கள்  கண்டறிந்து அதனை நிரூபித்துள்ளார்கள்.

அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்காக மட்டுமே உணவை உட்கொள்கின்றன. ஆனால், மனிதர்கள் மட்டும் இதிலிருந்து வேறுபட்டு சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் பலவித இரசாயன பொருட்கள் கலந்த உணவிற்கு அடிமையாகி உடல் நலத்தை கெடுத்துக்கொள்கிறோம்.

உணவில்  அஜினமோட்டோ  அதிகமாக  சேர்ப்பதால்  தீராத தலைவலி,  நரம்பு பாதிப்பு, இருதய  கோளாறு,  மூச்சுத்திணறல், உயர்  இரத்த  அழுத்தம், தூக்கமின்மை, வாந்தி, சோம்பல், ஆஸ்துமா, விழித்திரை  பாதிப்புகள்  போன்ற விளைவுகளை  நீங்கள்  சந்திக்க நேரிடும்.

குறிப்பாக, பெண்களுக்கு  அடி வயிற்று பிரச்சனைகள், மலட்டுத்தன்மை, தைராய்டு குறைபாடுகள், மன இறுக்கம், முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.  மேலும், கர்ப்பிணி பெண்கள் அஜினமோட்டோ கலந்த உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சுவையை  மட்டுமே  மனதில்  வைத்து  கொண்டு  அதிக  விலை  கொடுத்து பிரச்சனைகளை  விலைக்கு  வாங்க  வேண்டாமே!!!

தூங்காநகரின் மற்றுமொரு பெருமை “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்”

கார்ப்ரேட் உலகில் ஓர் பாரம்பரிய உணவகம்

ஹோட்டல் உணவு என்றாலே அஜினமோட்டோ கலந்த உணவு தான் என்ற சொல்லை மாற்றியமைக்கும் விதமாக மக்களின் ஆரோக்கியம் கருதி தென் தமிழகத்திலேயே முதல் முறையாக சைவ பாரம்பரிய உணவு விநியோகம் செயல்பட்டு வருகிறது.

புத்திக்கூர்மையுடன் இலக்கியம் படைத்த நம் தமிழன், உடல் வலிமையில் மாபெரும் பராக்கிரமசாலியாக இருந்தான். கங்கையை வென்றான், கடாரத்தையும் வென்றான். இதுபோன்ற உடல்வலிமைக்கு நமது பாரம்பரிய உணவுகளே  ஒரு முக்கிய காரணம்.

அட்சயபாத்ரா உணவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய உணவாகும்.  வேலையின் காரணமாக மதிய உணவை வீட்டில் இருந்து எடுத்துக்கொள்ளாத  சூழ்நிலை ஏற்படுகிறதா? இதோ  அட்சயபாத்ரா உங்களுக்கு ஒரு தீர்வாக அமைகிறது.

மதுரையில் சிறந்த சைவ உணவாக அட்சயபாத்ரா ஃபுட்ஸ் திகழ்கிறது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் மற்றும் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று உணவுகளை குறித்த நேரத்தில் வழங்கி வருகிறோம்.

அட்சயபாத்ராவின் தனித்துவம்

வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உணவுகளை தயாரிக்கிறோம். எந்தவித செயற்கை இரசாயனங்களையும் உணவில் பயன்படுத்தமாட்டோம். முக்கியமாக, வேதிப் பொருட்களின் ஒன்றான அஜினமோட்டோவை உணவில் உபயோகிக்கமாட்டோம். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தமாட்டோம். புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துவோம்.

எங்களிடம் 2000-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும், 720 காய்கறிகள் வகைகளை கொண்டு 275-க்கும் மேலான  உணவு வகைகளை வழங்குகிறோம். குறிப்பாக, 90 சதவீதம் வேகவைத்த காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துவோம்.

வாடிக்கையாளர்களே!!!  இயற்கையான  முறையில் செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவு நம்மிடம் இருக்க இந்த அஜினமோட்டோ தேவையா?

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.CALL US

6385788401, 6383201274


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 600009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.