
ஆரோக்கிய உணவுகள்: பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவர்களுக்கு அடிக்கடி இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில 6 முக்கிய ஆரோக்கிய உணவுகள் மற்றும் அதன் நன்மைகளை பற்றி பார்ப்போம்:
6 முக்கிய ஆரோக்கிய உணவுகள்
- கீரை வகைகள்
- காய்கறிகள்
- பழவகைகள்
- பூண்டு
- தானிய வகைகள்
- பச்சை பட்டாணி
ஆரோக்கிய உணவுகள் – கீரை வகைகள்
வளரும் குழந்தைகளுக்கு தினமும், அல்லது வாரத்தில் குறைந்த பட்சமாக இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது மாத சந்தா முறையில் உணவு. கீரையில் அதிகளவில் அயர்ன், வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவை இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்தத்சோகை ஏற்படாமல் தவிர்க்கும்.
காய்கறிகள்
உங்கள் குழந்தைகளின் உண்ணும் உணவில் கட்டாயம் இடம்பெற வேண்டும். அதிலும் முக்கியமாக பீட்ரூட், கேரட், பீன்ஸ், வெண்டைக்காய், பாகற்காய், தண்ணீர் காய்கள் போன்றவை அதிகம் இருக்கவேண்டும்.
பழங்கள்
ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, கொய்யாபழம், மாம்பழம் போன்ற பழங்களை தான் பொதுவாக வாங்குகிறோம். அத்துடன், வைட்டமின் சி இருக்கும் பழங்களை அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். நெல்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு மற்றும் பப்பாளி போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும். எனவே இது குழந்தைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பூண்டு
குழந்தையின் உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிற்கும் தன்மை கொண்டது பூண்டு. இதில் உள்ள Allicin என்ற பொருள், இன்ஃபெக்ஷனால் வரக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் பூண்டு காய்ச்சல் மற்றும் சளி அண்டாமல் காக்கும். அதனால் வாரத்திற்கு ஒருமுறையாவது குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
தானிய உணவுகள்
கம்பு, சோளம், கோதுமை, ராகி, கேள்வரகு போன்ற தானியவகைகளை வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவற்றில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து குழந்தையின் உடலைத் தொற்றுகளில் இருந்து காக்கும்.
பச்சை பட்டாணி – ஆரோக்கிய உணவுகள்
பச்சை பட்டாணியில் வைட்டமின்கள் ஏ, சி பி1 மற்றும் பி6 போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் அவற்றில் கரோட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களிலும் அதிகமாய் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. Visit us Atchayapathra Foods