
சிறுதானிய உணவின் பயன்கள்: ஆரம்ப காலத்தில், நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் ஆகும். இந்த சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரிசியாகக் கருதப்படுகிறது. சத்து மிகுந்த சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும்.
சிறுதானியங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. இவற்றில் 25 சதவீதம் புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இவை வைட்டமின் ‘ஈ’, வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்க்ஸ், நியாசின், தயமின். மற்றும் ரிபோபிளேவின் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாராமாக விளங்குகின்றது.
கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இவை அனைத்தும் அதிக ஆற்றலை தரக்கூடியவை. இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.
சிறுதானிய உணவின் பயன்கள்
ஊட்டச்சத்து நிறைந்தது
நமது உடலுக்கு சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. மேலும், இந்த சிறுதானியங்களில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்த உதவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. இதில் கால்சியம் நிறைந்துள்ளதால் சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடைய செய்யும்.
சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திரமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது “சிறுதானியங்கள்”. வைட்டமின் “பி” நமது உடலின் இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. இவ்வாறு குறைவதன் மூலம் கொழுப்புகளை தடுக்கப்படுகிறது. சிறுதானியங்களில் காணப்படும் நியாசின் இரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்து செல்லப்படுவதை தடுக்கிறது. இது இரத்தக் கசிவு ஏற்படுவதிலிருந்தும் இதயத்தைப் பாதுகாக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைத்தல்
பொதுவாக சிறுதானியங்களில் மெக்னீசியம் காணப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. மேலும், இது ஆஸ்த்துமா மற்றும் ஒற்றை தலைவலி ஏற்படுவதை பெரிதும் குறைக்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட உணவு வகைகளுள் ஒன்று சிறுதானியம் ஆகும். இதில் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளன என்பதை நாம் அறியாமலே இருந்துவிட்டோம். இப்போது இந்த கட்டுரையின் மூலம் சிறுதானியங்களின் பயன்களை பற்றி தெரிந்து கொண்டிருக்க முடியும். ஆதலால், இப்பொழுதே சிறுதானியங்களை உங்கள் உணவுப்பழக்கத்தில் வாரம் இருமுறையாவது சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்து மகிழுங்கள். Visit us PhDiZone