fbpx

பழமை மாறா உணவுகளும் அதன் பயன்களும்

March 30, 20210
homemade-foods-atchayapathra-foods.jpg

பழமை மாறா உணவு: ஒரு சமூகத்தின் பாரம்பரியம் அதிகம் அறியப்படுவது உணவின் மூலம் தான். ஒவ்வொரு நாட்டிற்கும் மண்ணுக்கும் அதன் பாரம்பரிய உணவே பெரும் அழகு சேர்க்கும். அதை காப்பது நம் அனைவரின் கடமையாகும். பழமை மாறா பாரம்பரிய உணவும் அதன் நன்மைகளை பற்றியும் தெளிவாக காணலாம். பாரம்பரிய உணவுகளில் இட்லி, இடியாப்பம், அடை தோசை மற்றும் பெசரட்டு ஆகியவை பற்றி இங்கு காண்போம்.

இட்லி

தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்குப் போனாலும், உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது இட்லி தான். `ரெண்டு இட்லி’ என்றபடி டிபனை ஆரம்பிக்கிற நம் ஊர்க்காரர்களின் பழக்கம், அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியாதது. இன்றைய தலைமுறையினருக்கு நான்கு அல்லது ஐந்துக்கு மேல் உள்ளே இறங்க மறுக்கிறது. இட்லி அனைத்துக் காலத்திலும் அனைவராலும் சாப்பிடக் கூடியதாக உள்ளது. நமது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லி பெரும் பங்கு வகிக்கிறது. நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை கொடுப்பது மட்டுமின்றி நமது தசைகளையும் வலிமையாக வைத்துக் கொள்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுருசுருப்பைக் கொடுக்கிறது.

இடியாப்பம்

இடியாப்பம் என்பது ஒரு மென்மையான மற்றும் சுவையான உணவு. பாரம்பரிய காலத்திலிருந்தே இந்த இடியாப்பம் நடைமுறையில் உள்ளது. ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதாலும் எளிதில் சீரணமாகும் சக்தி கொண்டுள்ளதாலும் இதை வயதானவர்களும் , சிறு குழந்தைகளும் சுலபமாக உட்கொள்ளும் உணவாக உள்ளது. மேலும் இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் , இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு அதிக அளவிலும், எந்த நேரத்திலும் கொடுக்கும் உணவாக உள்ளது.

அடை தோசை

அடை தோசை மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு. இந்த தோசையை பல்வேறு பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால், இதனை காலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதுடன், மற்றும் விரைவில் பசியெடுக்காமலும் இருக்கும்.

பெசரட்டு

பெசரட்டு என்பது பாசிப்பயறு கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பாசிப்பயிறு சேர்ப்பதால் சத்தான உணவும் கூட. இதை உண்பதன் மூலம் தேவையான புரோட்டீன் சத்து கிடைக்கப் பெறும். பழமை மாறா ஆரோக்கியமான உணவுகள் நம்ம அட்சயபாத்ராவில்!
வாடிக்கையாளர்களின் நலம் கருதி சூடான, சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை பாரம்பரிய முறைப்படி தயாரித்து தங்களது இல்லம் அல்லது அலுவலகம் தேடி கொண்டு வந்து வழங்குகிறோம்.

வாடிக்கையாளர்களே, உங்களின் வசதிக்கேற்ப இன்றே ஆர்டர் செய்யுங்கள்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.



CALL US

6385788401, 6383201274


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.