Table of Contents
கறிவேப்பிலை சாதம் நன்மைகள்
கறிவேப்பிலை சாதம் நன்மைகள்: நமது சமைக்கும் போது வாசனைக்காக பயன்படும். நம்முடைய பாரம்பரியமான உணவு முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்த இலையானது பார்ப்பதற்கு சிறிய தோற்றமாக இருந்தாலும் இவற்றில் இருக்கும் நன்மைகள் ஏராளம். இந்த கறிவேப்பிலையின் நன்மைகளை சிலர் அறியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் உணவிலிருந்து தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் பல விதமான மருத்துவ பயன்கள் நமக்குக் கிடைக்கும் மற்றும் கறிவேப்பிலை சாதம் நன்மைகள் கீழே காணலாம்.
இரத்த சோகையைக் குணப்படுத்தும்
நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது மட்டும் இரத்த சோகைக்கான காரணம் இல்லை. நமது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது மட்டும் இரத்த சோகைக்கு காரணம் இல்லை. இரும்புச்சத்தினை உறிஞ்சிவதிலும் மற்றும் உறிஞ்சிய இரும்புச் சத்தினை பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடும் இந்த இரத்த சோகைக்கான மற்றொரு காரணமாகும்.
இதில் போதுமான அளவு இரும்பு சத்தினையும் மற்றும் போலிக் அமிலத்தினையும் கொண்டுள்ளதால் எலும்புகளை வலுவடைய செய்யும். எனவே நீங்கள் உண்ணும் உணவில் கருவேப்பிலையை சேர்த்து கொள்வது அவசியம்.
கண்பார்வையை மேலும் உறுதியாக்கும்
கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ நிறைந்து காணப்படுகிறது. கறிவேப்பிலையில் வைட்டமின் – ஏ கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளதால் நமது கண்களை மிகவும் பாதுகாக்கிறது. வைட்டமின் – ஏ குறைபாடு இருந்தால் கண்களில் பார்வை குறைபாடு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கவும் மேலும் முற்றிலும் குணம் பெற உதவும்.
ஆதலால் கறிவேப்பிலை இலைகளை அதிகம் உண்பதன் மூலம் அதில் நிறைந்திருக்கும் வைட்டமின் – ஏ கண்களில் குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கும்.
கறிவேப்பிலையில் நிறைந்திருக்கும் சத்துக்கள்
- பாஸ்பரஸ்
- வைட்டமின் – பி2
- இருபுச்சத்து
- வைட்டமின் – சி
- கால்சியம்
- வைட்டமின் – ஏ
- கார்போஹைட்டிரேட்
- புரதம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன
கறிவேப்பிலையின் சுவைக்கும் மணத்திற்கும் இவைகள் தான் முக்கிய காரணம். இவ்வாறு பலவகையான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் நிறைந்த கறிவேப்பிலை நமது உடலிற்கு பலத்தையும் சக்தியினையும் அதிகரிக்கிறது.
நாம் உண்ணும் உணவில் தேவையில்லை என்று தூக்கி எறியும் கறிவேப்பிலையில் நிறைந்துள்ள நன்மைகளை பற்றி அறிந்திருப்பீர்கள். ஆதலால் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து கொண்டு ஆரோக்கியமாக இருங்கள். Visit us Atchayapathra Foods