Table of Contents
சாப்ட்வேர் நிபுணர்களின் சாப்பாட்டு கடை
சாப்பாட்டு கடை: மதுரையில் கையில் போனும், மடியில் லேப்டாப்புமாக சாப்ட்வேர் உலகத்தில் வாழும் 3 பேர். திடீரென உணவுத்துறையில் தடம் பதித்த கதை தெரியுமா. முதுநிலை பட்டதாரிகள் சுந்தரேஷ், கார்த்திக், பிஎச்.டி., முடித்த முத்துமாரி. கூட்டணியில் உருவானதுதான் அட்சயபாத்திரா புட்ஸ் நிறுவனம். வீட்டுச் சுவையில் உணவை தயாரித்து, சுடச்சுட வழங்குகின்றனர். உணவுத்துறையில் ஜெயித்த கதையை விவரிக்கின்றனர் இந்த மூவர் கூட்டணி.
1200 பேருக்கு டெலிவரி
வெளிநாடுகளில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றிய பின். 18 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் எலுசியம் சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கினேன். 53 நாடுகளுக்கு சாப்ட்வேர் தயாரித்து கொடுக்கிறேன். உணவின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தால் 26 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். எனது பார்ட்னர் கார்த்திக்கை. யதார்த்தமாக சந்தித்த போது, உணவு தயாரிக்கும் எண்ணம் உருவானது. முதற்கட்டமாக எங்கள் கம்பெனி ஊழியர்களுக்கு உணவு தயாரிக்க ஆரம்பித்தோம். மதுரையில் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடையாது. அதனால் அவர்களுக்கு 50 ரூபாயில் தரமான உணவு தர நினைத்தோம். மூன்று மாதம் நண்பர்களுக்கு இலவசமாக டெலிவரி செய்தோம். பின்னர் வெளியில் ஆர்டர் எடுக்க ஆரம்பித்தோம். ஏப்., 2018ல் அட்சயபாத்ரா புட் நிறுவனத்தை தொடங்கினோம். அடித்தட்டு, நடுத்தர மக்கள் எங்களது வாடிக்கையாளர்கள். தற்போது 1200 பேருக்கு டெலிவரி செய்கிறோம். அடுத்ததாக அஞ்சறைப்பெட்டி. என்ற பெயரில், சாதம், சாம்பார், ரசம், குழம்பு, மோர், இரண்டு காய்கறிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
-சுந்தரேஷ்
குறை சொன்னேன்… பார்ட்னரானேன்…
நான் எலுசியம் கம்பெனியில் இயக்குனர், அட்சயா புட் தொடங்கிய போது. விமர்சகராக முதன்முதலில் குறைசொல்ல ஆரம்பித்தேன். அதற்காகவே என்னையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டனர். டெலிவரி பேக்கிங் என்னுடைய பணி. வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு 40 நிமிடங்களில் பேக்கிங் முடித்து டெலிவரிக்கு அனுப்பிவிடுவேன். பாத்திரங்களை 3:00 மணிக்கு மேல் சேகரிக்கிறோம். காலை 9:30 மணிக்குள் மதிய உணவுக்கும் மாலை 4:30 மணிக்குள் டின்னருக்கு ஆர்டர் செய்யலாம். வாரம், மாதம், ஆண்டு சந்தா ஆர்டர் எடுக்கிறோம்.
-முத்துமாரி அய்யாக்கண்ணு
சூடும், சுவையும் ஸ்பெஷல் – சாப்பாட்டு கடை
அப்பாவுடைய ரைஸ் மில் அனுபவம் எனக்கு கை கொடுத்தது. எங்கள் நிலத்தில் விளைந்த அரிசி, எங்கள் மில்லில் சுத்தம் செய்து. சாதத்திற்கு பயன்படுத்துகிறோம். பதப்படுத்தப்பட்ட, பிரீசரில் வைத்த பொருட்கள், அஜினோமோட்டோவை பயன்படுத்துவது இல்லை. இரண்டு சாதம் அல்லது ஒரு சப்பாத்தி, இரண்டு காய்கறி, ஒரு சைடீஸ் வழங்குகிறோம். எங்களிடம் 445 விதமான சாதம், 580 காய்கறி, 40 விதமான சப்பாத்தி வகைகள் உள்ளதால். ஒருநாள் வழங்கிய உணவு மறுபடி தயாரிக்க 60 நாட்களாகும்.
காலையில் 6:30 மணிக்கு காய்கறிகள் வரும். 10:00 மணிக்குள் சமைத்து முடித்து 11:30 மணிக்கு வேனில் ஏற்றி விடுவோம். மதியம் 1:30 மணிக்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவு சென்று விடும். வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு மாத கடைசியிலும் அடுத்த மாதத்திற்கான உணவு மெனு பட்டியலை அனுப்பி விடுவோம். பகல் 3:00 மணிக்கு சமைக்க தொடங்கி மாலை 6:00 மணிக்கு தயாராகி விடும். 8:30 மணிக்குள் இரவு உணவு கொடுத்து விடுவோம். சூடும், சுவையும் குறையாமல் கிடைப்பதால் வரவேற்பு அதிகரித்துள்ளது. Visit us Atchayapathra Foods
-கார்த்திக்
திறமையோடு நட்பும் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவர்கள் உதாரணம். இவர்களை பாராட்ட +91 638-578-8401