இதய நோய் வராமல் தடுக்க: இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதய நோய் என்பது இன்றைய வேகமான உலகில் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது.
Table of Contents
இதய நோய் வராமல் தடுக்க வேண்டுமா?
இரண்டு விதமான முறைகள் கட்டாயமாக பின்படுத்த வேண்டும். அவை
- ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும்
- உடற்பயிற்சி
இருதய ஆரோக்கியத்திற்கு இந்த இரு விதமான முறைகளும் பெரிதும் உதவும் என்று பல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இதய ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால்தான், உடலின் எல்லா உறுப்புக்களும் சீராக செயல்பட முடியும். எனவே ஒவ்வொருவரும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கவேண்டும்.
அதற்கு முதலில் ஒருவர் செய்யவேண்டியது ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதன் தான். ஆரோக்கியமான டயட் சாப்பாட்டில் தான் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, பல நோய்களிலிருந்து விடுவிக்கும்.
அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியவை
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம்
- இதயத்துக்கு வலிமை தரும் ஆரோக்கியமான உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப்பொருட்களே இதயத்துக்கு மிகவும் நல்லது.
- மேலும் அதிக அளவில் பழங்கள், பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.
- புரதச்சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்பு வருவதற்கான பாதிப்பை குறைக்கின்றன.
- முடிந்த அளவு சைவ உணவை உட்கொள்வது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது.
- அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அந்த உணவுகளில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் எளிதாக பெருக்கி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும். பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
உடற்பயிற்சி
- தினமும் அதிகபட்சம் 45 நிமிடங்கள், குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
- நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் அல்லது சைக்ளிங் பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அது ஊட்டமாகவும் உடலில் செயல்படுகிறது.
- தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதால் மாரடைப்பு வரக்கூடிய பாதிப்பை குறைக்கிறது.
- யோகா மற்றும் தியானப்பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. Visit us Atchayapathra Foods
ஆரோக்கியமான உணவை உட்கொள்வோம்! இதயத்தைக் காப்போம் என ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்!