கொண்டைக்கடலை சாதம் ஆரோக்கியமான உவை - 8 நன்மைகள்

கொண்டைக்கடலை-சாதம்-benefits-of-peanut-food-delivery-Madurai.jpg

Table of Contents

8 அறிவியல் ஆதார நன்மைகள் உள்ள கொண்டைக்கடலை சாதம்!

இன்றைய கால கட்டத்தில் நாம் சுவைக்க துரித உணவு (Fast food) மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு தேடியே உனைப்பார்க்கிறோம். இது இப்பொழுது 3 வேளையும் தொடர்கின்றது மதிய உணவு கூட சமீபத்திய காலங்களில் இது போன்ற உணவை ஆர்டர் செய்கிறோம். நாளடைவில் அது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றது. நம் நாக்கின் சுவையை  மகிழ்விப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி நம் ஆரோக்கியத்தைப் பற்றி கொள்ள தவறுகிறோம்.

நம் பிஸியான வாழ்க்கையில் நம் உணவு அட்டவணையில் கவனம் கொள்ள வேண்டும் ஆரோக்கியமான உணவுகள் நம் உணவில் சேர்க்க வேண்டும்.

Did You Know?

Your energy levels might also be affected by eating bad meals. For example, consuming fatty and sugary foods may cause you to feel tired, exhausted, and sleepy more frequently.

கொண்டைக்கடலை சாதம் – ஆரோக்கியமான உணவு என்பது வேகவைத்த உணவு காய்கறிகள், பயறுவகைகள், கீரைகள் சிறுதானிய வகைகள் இது போன்ற உணவுகளே. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களில், சமச்சீரான, சத்தான உணவுமுறைக்கு மாறுவது, அதாவது, எல்லாவற்றையும் சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் மற்றும் சரியான கலவையுடன் சாப்பிடுவது. கொழுப்புகளை முழுமையாக விலக்காதீர்கள் அல்லது நார்ச்சத்து மற்றும் புரதங்களை மிகைப்படுத்தாதீர்கள்! மேலும், குழந்தைகளுக்கு அனைத்து வகையான உணவுகளையும் கலந்து கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் இது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான வயது

பயறு வகைகளில் தனிச்சிறப்பு கொண்ட கொண்டைக்கடலை

புரத சத்துக்கள் நிறைந்தது

கொண்டைக்கடலையில் சத்துக்கள், புரதங்களும் நிறைந்துள்ளது.
  • போலிக் அமிலம்,
  • மெக்னீசியம்
  • இரும்புசத்து,
  • வைட்டமினகள்
  • புரதச்சத்து,
  • செலினியம்
  • சுண்ணாம்பு சக்தி,
  • வைட்டமின் பி
  •  நார்ச்சத்து போன்றவை நிறைந்து உள்ளது கொண்டைக்கடலையில்

நம் உணவில் ஒவ்வொரு உணவுமே பல்வேறு விதமான சத்துகளையும், உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. அதில் ஒன்று தான் கொண்டைக்கடலை, இந்த தொகுப்பில் நாம் கொண்டைக்கடலை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி காண போகிறோம்.

கொண்டைக்கடலை சாதம் benefits of peanut food delivery Madurai 2

கொண்டைக்கடலையின் நன்மைகள் இதோ!

  1. இதயம் மற்றும் கல்லீரல் வலுவுக்கு உறுதுணையாக இருக்கும்
  2. எலும்பு வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும்
  3. உங்கள் எடையை சீர்படுத்த உதவும்
  4. இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு சீர்படுத்தும்
  5. செரிமானத்திற்கு நன்மை தரும்
  6. சரும பளபளப்புக்கு சிறந்தது
  7. கர்ப்பிணி பெண்களும் கொண்டைக்கடலையும்
  8. இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க உதவும்

 

1. இதயம் மற்றும் கல்லீரல் வலுவுக்கு உறுதுணையாக இருக்கும்

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி, மெக்னிசியம் மற்றும் செலினியம் இருக்கிறது இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள மினரல்கள் இரத்தம் கட்டுதலை தடுக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து இதயத்தை என்றும் ஆரோக்கியமாக வைக்கிறது

நீரிழிவு நோயிலிருந்து காப்பாற்றுகிறது மேலும் இந்த நோயால் அவதிப்படுபவர்கள் வேதனையை கொண்டைக்கடலை குறைகிறது.

2. எலும்பு வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும்

கொண்டைக்கடலையில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உடலின் உள்ள எலும்பை உறுதியாகவும் வலிமையாகவும், நல்ல ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

கொண்டைக்கடலை சாதம் – கொண்டைக்கடலையில் இருக்கும் கோலின்(choline) சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு நியாபக திறன் அதிகரிப்பதற்கு கொண்டைக்கடலை மிகவும் உறுதுணையாக இருகியது இதை நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

3. உங்கள் எடையை சீர்படுத்த உதவும்

கொண்டைக்கடலை மிகவும் குறைந்த கலோரி கொண்டுள்ளது அதனால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும் ஆகையால் உடல் எடை சீராக இருக்கும் அதேசமயம் சத்துகள் கொடுத்து நம்மை ஆரோக்கியமாகவும் வைக்கிறது

4. இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு சீர்படுத்தும்

உடலில் இரத்த சர்க்கரை அளவு சீர்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சீர்படுத்தி உடலுக்கு நல்ல இரத்த ஓட்டம் செயல்பட செய்கிறது.

இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது, சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

5. செரிமானத்திற்கு நன்மை தரும்

கொண்டைக்கடலை சாதம் – கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து சீரண சக்தியை மேம்படுத்தி உடலில் இருந்து கேட்ட நச்சுகளை அகற்றி நம் உடலில் உள்ள செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படுவதற்கான சக்தியை தருகிறது மேலும் மலச்சிக்கல் மற்றும் சீரண கோளாறு போன்றவற்றை தடுக்க முடியும். உணவுகளை எளிதில் செரிமானம் செய்ய வைக்கிறது இதில் உள்ள நார்ச்சத்து

6. சரும பளபளப்புக்கு சிறந்தது

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் வந்த பிறகு நீக்குவதற்கு கொண்டைக்கடலை மாவு பயன்படுத்துவார்கள் ஆனால் வராமல் தடுப்பதற்கு அன்றாட உணவில் கொண்டைக்கடலை பெரும் உதவியாக இருக்கும்.  அதுமட்டுமல்ல கருநிற கூந்தலுக்கு கருப்பு சுண்டல் மிகவும் நல்லது இதில் உள்ள புரோட்டீன் முடிக்கு தேவையான வலிமையை தருகிறது.

7. கர்ப்பிணி பெண்களும் கொண்டைக்கடலையும்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையானா ஊட்ட சத்துக்கள் அதாவது போலிக் அமிலம் வைட்டமின் பி  கொண்டைக்கடலையில் இருக்கிறது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

8. இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க உதவும்

இரும்பு சத்து குறைபாட்டை குணப்படுத்தும் கொண்டைக்கடலை. கொண்டைக்கடலை இரும்பின் சிறந்த மூலமாகும். இரும்புச் சத்து நிறைந்தது என்பதால் உடலில் ஹூமோகுளோபின் அளவை அதிகரித்து நல்ல இரத்த ஓட்டம் உண்டாக்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த உணவு நம் மதிய உணவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறீர்களா? உங்களுக்கவே மதிய உணவாக!

கொண்டைக்கடலை சாதம் அலுவலக மதிய உணவிற்கு ஒரு சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது சத்தானதாகவும், வழக்கமான உணவு இல்லாமல் பார்ப்பதற்கும் ருசிப்பதற்கும் ஒரு புதுமையாக இருக்கும். கொண்டைக்கடலை சுவையான கலவையுடன் கூடிய ஆரோக்கியமான மதிய உணவு (Food delivery Madurai) உங்கள் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்ஸில்!

கொண்டைக்கடலை சாதம் benefits of peanut food delivery Madurai 3

அட்சயபாத்ரா ஃபுட்ஸ்:

இவ்வளவு புரத சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலை சாதம் நம் உணவு பட்டியலில் ஒன்று. உங்கள் ஆரோக்கியத்திற்காக தேர்தெடுக்க பட்ட உணவு பட்டியலை வகுத்துள்ளோம். (Monthly Food delivery in Madurai

என்றும் உங்கள் ஆரோகித்தை மேற்படுத்த, மற்றும் வீட்டில் சமைக்கும் பக்குவத்தில் நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்ஸில் மாதம் அல்லது வார பிளானில் subscribe செய்து ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் நாங்கள் ஆரோக்கியமான உணவை   உங்கள் இருப்பிடம் தேடி விநியோகம் செய்கிறோம்.

 

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time

Monday -Saturday: 11.30AM – 1.00PM

Dinner Serve Time

Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.



PRODUCTION UNIT

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.