லேசாக காய்ச்சல் வந்தாலோ சளி தும்மல் வந்தாலோ அம்மா முதலில் நமக்கு கொடுப்பது ரசம் தான் அது மட்டும் இல்லை விசேஷ சாப்பாட்டு முதல் இல்லம்தோறும் உணவு நிறைவை நாம் ரசத்தில் தான் முடிவு செய்கிறோம் பலவகை குழம்பு காய் என்றாலும் இறுதியாக ரசம் சாப்பிட்டுத்தான் உணவை நிறைவு செய்வோம் இவற்றை நாம் காலம் காலமாக தொன்று தொட்டு பழகி வருகிறோம்.
பலவகை ரசம் உள்ளது ஒவ்வொரு ரசத்திற்கும் தனித்துவமான மணம் சுவை ஆரோக்கியம் உள்ளது.
Table of Contents
சௌத் இந்தியன் சூப்பர் சூப்!
வெளிநாட்டவர்கள் நம்ம ஊர் ரசத்துக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் “சௌத் இந்தியன் சூப்பர் சூப்” சாப்பிடும் அனுபவத்தை ருசி ஏற்றுவதற்கு நாக்கின் ருசி நரம்புகளைத் தூண்டி உணவின் சுவையை அறிவதற்கும் ரசம் பேருதவி புரிகிறது.
ரசித்து ருசிக்க சுவையான ரசம்
மணக்க மணக்க ரசம், சமைக்கும் போதே நம்மை சாப்பிட தூண்டும் அளவிற்கு மணம், சிலசமயம் அம்மா, உப்பு காரம் சுவை பார்ப்பதற்கு அடுப்பில் இருக்கும் தருணமே கரண்டியில் சிறுது அளவு எடுத்து உள்ளங்கையில் ஊற்றுவார்கள் பொறுக்க பொறுக்க இளம்சுட்டில் சுவைக்கும் போது ஆஹா ஆஹா வார்த்தையில் வர்ணிக்க முடியாத சுவையாக இருக்கும்.
பின்பு சாப்பிடும்போது சாதத்தில் அதிக அளவு ரசம் ஊற்றி சாதம் சாப்பிட்டவுடன் மீதி ரசம் மற்றும் இருக்கும் அதை சிறிது சத்தத்துடன் குடிக்கும் போது ஆஹா பேரின்பம் கிடைக்கும்.
ஆனால் இப்பொழுது நாம் சமைக்கும் ரசத்தில் அந்த சுவை இல்லையே ரசம் வைக்கும் பக்குவம் தெரியவில்லையே என்று கவலையா? ரசம் மட்டும் இல்லை அவசரகால கட்டத்தில் சமைக்க நேரமில்லை சமைக்கும் பக்குவம் அறியவில்லை என்ற கவலையை விடுங்கள்.
தினம் ஒரு ரசம்: மதிய உணவு காய்கறிகளுடன் ரசம் சாம்பாருடன் உங்கள் இருப்பிடம் தேடி உணவு விநியோகம்(Food delivery) செய்கிறோம் சந்தா அடிப்படையில் நாள்தோறும் மதிய உணவு மட்டும் இல்லை காலை உணவு, இரவு உணவு என 3 முறையும் உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் என நீங்கள் இருக்கும் இடத்தில் உணவு டெலிவரி செய்கிறோம்.
ரசத்தில் இத்தனை வகையா?
ரசம் பாரம்பரியத்தின் சுவடு, ஒரு நல்ல உணவின் முடிவு ரசம், ரசம் உணவின் திருப்தியை உறுதிப்படுத்தும். செரிப்பணத்திற்கும், காய்ச்சலுக்குமான உணவு அல்ல ஒரு விருந்தின் திருப்தியை எடுத்து சொல்லும் உணவு.
தினம் ஒரு ரசம்: பலவகை ரசம், ஆம் மிளகு ரசம், இஞ்சி ரசம், பருப்பு ரசம், கொள்ளு ரசம், பூண்டு ரசம், புதினா ரசம், லெமன் ரசம் என பலவகை ரசம் உள்ளது மேற்சொன்னவாறு ஒவ்வொரு ரசத்துக்கு தனி சுவை மணம் ஆரோக்கியம் தனித்து இருக்கும் அதை விரிவாக காண்போம் வாருங்கள்.
இம்யூனிட்டி(Immunity) தரும் பூண்டு ரசம்
ரசம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பூண்டு ரசமே பொதுவாக இல்லம்தோறும் வீடுகளில் பெரும்பாலும் செய்வது பூண்டு ரசம் ஆகும். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு தீர்வு தருகிறது. உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளிதருவதில் ரசம் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும், ஜலதோஷம், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களை அடித்து விரட்டுகிறது.
இவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களான மஞ்சள், கருப்பு மிளகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை நம்மை நோய்கள் அண்டவிடாமல் தடுக்கிறது. மேலும் குளிர்காலத்தில் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது குளிர்கால(காய்ச்சல் சளி) நோய்களிலிருந்து நம்மை இந்த பூண்டு ரசம் காக்கும்.
மழை பருவ கால நேரத்தில் நான் எழுந்திருப்பதே கடினம் இதில் நான் எவ்வாறு சமைப்பது ரசம் வைப்பது என்று யோசனையா?
அட்சயபாத்ரா ஃபுட்ஸ், நாங்கள் இருக்கிறோம் சுவையான ரசம் மட்டுமல்லாமல் ஆரோக்கியமான பாரம்பரியமான சைவ மதிய உணவு, காலை உணவு இரவு உணவு என்று 3 வேளையும் உணவை உங்கள் இருப்பிடத்தில் டெலிவரி செய்கிறோம்.
இஞ்சி ரசம்
சளி மற்றும் வறட்டு இருமல்லால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா, சளி மற்றும் இருமல் தொந்தரவில் இருந்து விடுபட ஏற்ற உணவு – இஞ்சி ரசம்.
அட்சயபாத்ராவின் இஞ்சி ரசத்தின் நன்மைகள் பற்றி இங்கே
- உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்
- தும்மல், அலர்ஜிக்கு ஏற்ற உணவு
- மார்பு சளியை குறைக்கும்
தென்னிந்தியாவின் பாரம்பரியத்துடன் நற்பலன்கள் உள்ளடக்கிய விட்டுபக்குவதில் செய்த இஞ்சி ரசம்.
புதினா ரசம்
புதினா இயற்கையாகவே மருத்துவ குணங்களால் நிறைந்தது. அதில் ரசம் என்றால் வைக்கும் ரசத்தில் மருத்துவ குணம் நேரடியாக நம்மை வந்து சேரும்.
சுவையான ரசம் அதில் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கும். சுவையோடு ஊட்டமும் நிறைந்த ரசம் இனி தவிர்க்காமல் உணவில் சேர்க்கலாம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில் சப்ஸ்கிரைப் பண்ணுவதன் மூலம்.
மிளகு ரசம்
உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்த பேருதவி செய்யும் மிளகு ரசம் மிளகில் உள்ள 17 நன்மைகள் இதோ
- சீரான ஜீரணம்
- மூக்கடைப்பை போக்கும்
- ஆஸ்த்மாவை குணப்படுத்துகின்றது
- உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்கும்
- நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது
- இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்
- அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிகின்றது
- கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்
- வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்
- இரத்த கொதிப்பை குறைக்கும்
- ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது
- புற்றுநோயை தடுக்க உதவும்
- சளி இருமலை போக்கும்
- வலி நிவாரணி
- நீரழிவு நோயை போக்க உதவுகின்றது
- தாது சத்துகள் நிறைந்துள்ளது
- வயிறு மற்றும் தொண்டை பிரச்சனைக்கு சிறந்த உணவு மணமனக்கும் மிளகு
தக்காளி ரசம்
தினம் ஒரு ரசம்: தக்காளி ரசம் என்பது தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு மற்றும் பிரதான உணவாகும். தக்காளி மற்றும் புளி கலவையில் செய்யப்படும் ரசம் மேலும் ருசி ஏற்ற மசாலாப் பொருட்கள் சுவையான இதமான உணவு
கொள்ளு ரசம்
கொள்ளு,
கொழுப்பு, உடல் எடை குறைக்க உறுதுணையாக இருக்கிறது
கொள்ளு கொழுப்பை கரைக்கும் சக்தி கொண்டது. நல்ல ஆரோக்கியத்தை தேர்ந்தெடுப்பது எங்களின் சிறப்பு, எங்கள் உணவு பட்டியலின் சிறப்பு.
கொள்ளின் ஆரோக்கியப் பலன்கள் இதோ
- புரதம் நிறைந்தது
- உடல் எடை குறைக்கும்
- சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- சர்க்கரைநோய்யை சீர்படுத்தும்
- சளி, காய்ச்சலுக்கு நல்ல தீர்வு
பருப்பு ரசம் – தினம் ஒரு ரசம்
பருப்பு ரசம் என்பது தென்னிந்திய உணவுகளில் வழக்கமாக தயாரிக்கப்படும் பொதுவான ரசம். பருப்பு ரசம் நறுமணம் மேலும் சிறப்பு, பொதுவாக இந்த ரசத்திற்கு தேர்தெடுக்க பட்ட துவரம் பருப்பைப் பயன்படுத்துகிறோம்,
ஒரு தாயின் விருப்பம் தன் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்க வேண்டும் என்பது! ஆனால் இன்றைய சூழ்நிலையில் வேலைக்கு செல்லும் பரபரப்பான கால கட்டத்தில், ஆரோக்கியமான, பாரம்பரிய உணவுகளை சமைக்க போதுமான நேரம் இல்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள், ஆம் தானே
இனி கவலை வேண்டாம் நாள்தோறும் ஆரோக்கியமான உணவு உங்கள் அலுவலகம் உங்கள் குழந்தையின் பள்ளி சென்றே நாங்கள் விநியோகம் செய்வோம்.
குழந்தைகள் விரும்பும் பருப்பு ரசம் அஞ்சறை பெட்டி மெனுவில் மாத மற்றும் வார சந்தாவில் குழந்தைகளின் பள்ளிக்கே டெலிவரி செய்யப்படும்.
ரசம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ரசம் சாப்பிட்டால் வாய்வு, பித்தம், வயிற்று உப்புசம், ருசியின்மை முதலிய பிரச்சனைகளை உடனே சரிசெய்யும். ரசம் மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. ரசத்தில் சேர்க்கும் மூலப்பொருட்கள் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், வயிற்றிற்கும், குடல் உறுப்புகளுக்கும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு, செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும் உறுதுணையாக இருக்கிறது.
ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு இதயக்கோளாறு, ஆஸ்துமா, சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள், குடல் பூச்சிகள், முதலியவற்றைக் சீர்ப்படுத்தும்.
தினம் ஒரு ரசம் உங்கள் அஞ்சறை பெட்டியில்
மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு, கொத்துமல்லி, சீரகம், வரமிளகாய், புளி, மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழைகள் இது போன்ற பொருட்கள் கொண்டு தயாரிக்கும் ரசம் பலவகையான நோய்கள் நம்மை ஆண்டாமலும் பல நோய்களுக்கு தீர்வாகவும் இருக்கிறது.
ரசத்தின் மகத்துவம் அறிந்து எங்கள் மெனு பட்டியலில் தினம் ஒரு ரசம் என்ற அடிப்படையில் அணைத்து விதமான ரசமும் சேர்த்து நாள்தோறும் உங்கள் இருப்பிடத்தில் சேர்க்கிறோம். ஆரோக்கியமான வீட்டு பக்குவத்தில் சமைத்த உணவை Subscription சந்தா அடிப்படையில் உங்கள் இருப்பிடத்தில் Homemade food delivery விநியோகம் செய்கிறோம்.