Ponnankanni-spinach-Benefits-for-IT-People-பொன்னாங்கண்ணி-கீரை-கம்ப்யூட்டர்யில்.jpg

Table of Contents

கம்ப்யூட்டர்யில் அதிக நேரம் வேலை செய்பவரா

உங்களுக்காகவே நல்ல மணமுடன் பொன்னாங்கண்ணி சாதம்!!

பொன்னாங்கண்ணி கீரை:

நம் உண்ணும் உணவிலேயே நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நாள்தோறும் கிடைக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை கொடுக்க நினைத்தாலும் போதுமான கால அவகாசம் கிடைப்பதில்லை ஏன்னெனில் அனைவரும் வேலைக்கு செல்லுவதால் கீரை போன்ற காய்கறிகளை பக்குவம் பாத்து பண்ண முடியவில்லை. அதனால் தான் சிறு வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறோம்.

 

சரி இப்போ, பொன்னாங்கண்ணி பற்றி பாப்போம்

பொன்னாங்கண்ணி கீரையானது மூல நோய், மண்ணீரல் நோய்களை கட்டுப்படுத்த நம் உடலுக்கு சக்தியை தருகிறது. உங்கள் தோல் பளபளக்கும், முகம் பொலிவு பெரும். பொன்னாங்கன்னி கீரையில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை இதில் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொன்னாங்கண்ணி கீரை ஆரோக்கியமான பொலிவான சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தில் இருக்கலாம். உங்கள் அழகு மேம்படும்.

பொன்னாங்கண்ணி கீரையில் உள்ள சத்துக்கள்

இரும்பு

கால்சியம்

புரதம்

வைட்டமின் ஏ

சுண்ணாம்பு (Calsium)

பாஸ்பரஸ்

வைட்டமின் சி

வைட்டமின் பி உள்ளன.

இவ்வளவு சத்துக்கள் ஒரே கீரையில் கிடைத்தால் நன்றாக இருக்கின்றன ஆனால் பெரும்பாலானோர் இதை எடுத்துக்கொள்வதில்லை.

 

கண்ணுக்கு ஸ்பெஷல் பவர் (Special Power) தரும் கீரை

பொன்னாங்கன்னி கீரையை அடிக்கடி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கண் பார்வை தெளிவு பெரும் கூடவே  இதயம் மற்றும் மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. இரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்குப் புத்துணர்ச்சி அளித்து நமக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.

கணினி வேலையாளரே: உங்கள் கண்ணை பாதுகாக்க! 

Attention IT/System Worker:

கண்ணுக்கு சிறந்தது இந்த பொன்னாங்கண்ணி சாதம், வெயிலில் வேலை செய்பவர்கள், நீண்ட நேரம் கணினி போன்ற மென்பொருள் பயனாளர்கள், கண் எரிச்சல் உள்ளவர்கள் இவர்கள் மட்டும் அல்ல குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பலன் தரும்  பொன்னாங்கண்ணி.

கண் கோளாறுகள்

                                       ” கண் உறுத்தலாக இருக்கு மங்கலாக தெரிகிறது!
                                         நாலு நாள் பொன்னாங்கன்னி கீரை சாப்பிடு சரி ஆகிடும்.”

 

பெரியோர் பலர் இவ்வாறு பதில் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆம் அது உண்மைதான் கண் தொந்தரவுக்கு பொன்னாங்கண்ணி ஒரு நல்ல தீர்வு தரும். நாள்பட்ட தொந்தரவு கூட சரி ஆகிவிடும். பார்வை குறைதல் போன்ற பிரச்சனை, மாலைக்கண் நோய் பிரச்சனை என கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

Online food delivery Near Me Madurai Delivered foods Near me madurai Homemade food delivery in madurai Monthly Food delivery near me பொன்னாங்கண்ணி சாதம் Ponnakanni rice

மேலும் சில நன்மைகள் இதோ

உடல் உஷ்ணத்தை தணிக்கும் 

உடல் வெப்பத்தை குறைத்து சாதாரண சரியான நிலைக்கு கொண்டு வரும் மற்றும் கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

 

தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்தும்

பால் சுரக்க செயல்படும் தாய்மார்களுக்கு தேவையான உடல் ஆற்றல், கல்லீரலில் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையா செயல் படுகிறது

 

ஆஸ்துமா

காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா போன்றவை குணமாக்கும்.

 

கண் மட்டுமல்ல பற்களும் வலுப்பெறும் 

இக் கீரையில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. அதனால் எலும்புகளுக்கும் பற்களுக்கு தேவையானா வலிமை கிடைக்கும்.

 

மூல நோய் சீர் படுத்தும்

மூல நோய் சீர் படுத்தும் மூல நோய் இரத்தக் கசிவு போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வு தரும்

 

எடை அதிகரிக்க விருப்பமா

அப்போ பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் எடை அதிகரிக்க பொன்னாங்கண்ணி மிக உறுதுணையாக இருக்கும் இது பலருடைய கூற்றாகும்.

 

தலைவலியால் அவதிப்படுகிறீர்களா?

பொன்னாங்கண்ணி இலையை கசக்கி நுகர்ந்து பார்த்தாலே தலைச்சுற்றல், தலைவலி போன்றவை குணமாகும் இதை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் உடல் வலுப்பெறும் அல்லவா!

 

உங்கள் உடல் ஆரோக்கியத்தை காக்க!!! அட்சயபாத்ரா ஃபுட்ஸ்

அவசர உலகில் கீரையை சுத்தம் செய்து சமைக்க நேரம் குறைவாக இருக்கு என்கிறீர்களா? தினமும் சமையல் செய்ய போதுமான நேரம் இல்லை என்ற கவலையா?

இனி கவலை வேண்டாம் மதுரை மக்களுக்காகவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பொன்னாங்கண்ணி சாதம், மணத்தக்காளி சாதம் என பலவகை சாதம் தினமும் ஒரு புதுவகையான ஆரோக்கியம் நிறைந்த உணவு பட்டியல்(meals menu list) நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில். ( Monthly food delivery in Madurai )

 

மேற்சொன்னவாறு, கவலை வேண்டாம் சமைக்க நேரம் இல்லை என்று. நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில் சப்ஸ்கிரைப்(சந்தா திட்டம்) செய்தால் போதும் – Food Subscription box delivery நாள்தோறும் உங்கள் வீட்டு வாசலிலே உணவை விநியோகம் செய்வோம், காலை மாலை மதியம் என 3 வேளையிலும்.

உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி உணவு டெலிவரி செய்வோம்(Homemade Food delivery in Madurai).

 

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.