Table of Contents
ஏராளமான நன்மைகள் தரும் உணவு வகைகள்
ஏராளமான நன்மைகள் தரும் உணவு வகைகள்: உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை “நன்மைகள் தரும் ஆரோக்கிய உணவு மட்டுமே”.
- கறிவேப்பிலை சாதம்
- பாசிப் பயறு சாதம்
- நெல்லி சாதம்
- புதினா சாதம்
கறிவேப்பிலை சாதம்
நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளில் கறிவேப்பிலை என்பது தவராமல் இடம்பெறும் பொருட்களில் ஒன்றாகும். இந்த கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் இவற்றில் இருக்கும் நன்மைகள் ஏராளம்.
ஆனால் இந்த கறிவேப்பிலையின் நன்மைகளை ஒருசிலர் தெரியாமல் அதை உண்ணும் உணவிலிருந்து தூக்கி எறிகிறார்கள். கறிவேப்பிலைக்கு தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையை கொண்டிருக்கும். பல நன்மைகள் மிகுந்த கறிவேப்பிலையை நாம் உணவில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கிறோம். கறிவேப்பிலை சாதம் என்பது முற்றிலும் கறிவேப்பிலையை மட்டுமே கொண்டிருக்கும். ஆகையால், நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது கறிவேப்பிலை சாதம் உண்ண வேண்டும். ஏராளமான நன்மைகள் தரும் உணவு வகைகள்.
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்
- பாஸ்பரஸ்
- வைட்டமின் – ஏ
- வைட்டமின் – சி
- இரும்புச்சத்து
- வைட்டமின் – பி2
- கார்போஹைட்டிரேட்
- புரதம்
- தாது உப்புக்கள்
- புரோலைன்
நன்மைகள்
- இரத்த சோகையைக் குணப்படுத்தும்
- சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும்
- கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கும்
- தலை முடியை வலுவாக்கும்
- நீரிழிவு நோயை குணப்படுத்தும்
பாசிப்பயறு சாதம்
பாசிப்பயறு என்றவுடன் நம் சருமம் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே முதலில் நினைவிற்கு வரும். ஆனால் அது உடலின் எண்ணற்ற ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதே நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. எனவே இது ஒரு மருத்துவ குணம் நிறைந்த உணவாகும்.
பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்
- விட்டமின் பி9
- விட்டமின் பி5
- செம்புச்சத்து
- இரும்புச்சத்து
- பாஸ்பரஸ்
- மெக்னீசியம்
- கால்சியம்
- நார்ச்சத்து
- அமினோ அமிலங்கள்
நன்மைகள்
- செரிமானத்தை மேம்படுத்தும்
- இதயத்தைப் பாதுகாக்கும்
- இரத்த அழுத்தத்தை சீராக்கும்
- நினைவுத் திறன் அதிகமாகும்
- காய்ச்சல் குணமாகும்
நெல்லி சாதம்
நெல்லி என்றதும் நம் நினைவுக்குவருவது அதன் சுவையும், கண்ணைக் கவரும் பச்சை நிறமும்தான். ஆனால் சுவையையும் கண்ணைக் கவரும் பச்சை நிறத்தையும் தாண்டி அதில் இருக்கும் சத்துகள் அநேகம். அதனால்தான் ஔவை முதல் சித்தர்கள் வரை அதைக் கொண்டாடினார்கள்.
நெல்லியில் உள்ள சத்துக்கள்
- நீர்ச்சத்து
- புரதச்சத்து
- மாவுச்சத்து
- நார்ச்சத்து
- வைட்டமின் சி
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- இரும்புச் சத்து
- கரோடின்
- வைட்டமின் பி
நன்மைகள்
- அல்சரைக் குணப்படுத்தும்
- உடல் எடையை குறைக்கும்
- உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும்
- கண் பார்வை மேம்படும்
- கல்லீரல் பிரச்சனையை குணப்படுத்தும்
புதினா சாதம்
நாம் உணவுகள் தயாரிப்பதில் மணத்துக்காக சேர்க்கப்படும் முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் புதினா. அதை தவிர்த்து இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. எனவே புதினா சாதம் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உண்ண வேண்டும்.
புதினாவில் உள்ள சத்துக்கள்
- நீர்ச்சத்து
- புரதம்
- கார்போஹைடிரேட்
- நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள்
- பாஸ்பரஸ்
- கால்சியம்
- இரும்புச்சத்து
- வைட்டமின் ஏ
- நிக்கோட்டினிக் ஆசிட்
- தயாமின்
ஏராளமான நன்மைகள் தரும் உணவு வகைகள்
- ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்
- நரம்புத் தளர்ச்சி மருந்தாகப் பயன்படும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- இது மூச்சுத்திணறல் நீக்கும்
- இரத்த சோகையை குணப்படுத்தும் Visit us PhDiZone