Table of Contents
பாரம்பரியமான சைவ உணவுகள்
“உணவே மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்” என்ற பொன்மொழிக்கேற்ப நமது உணவு பழக்கவழக்கம் இருக்க வேண்டும். ‘சைவம்’ என்பது பொதுவாக ‘தாவர அடிப்படையிலானது’ என்று பொருள்படும் என்றாலும், சில வகையான சைவ உணவுகள் உள்ளன. ஒரு நபர் சைவ உணவின் எந்த பதிப்பைப் பின்பற்றுகிறார் என்பது ஆரோக்கியம், சுற்றுச்சூழல், நெறிமுறை அல்லது பொருளாதார காரணிகள் உட்பட பல விஷயங்களைப் பொறுத்தது. நமது முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை சரியான நேரத்திற்கு எடுத்துகொண்டதால் எந்த விதமான நோய்நொடியும் இன்றி பல காலம் வாழ்ந்து உள்ளனர். அது போல இன்றைய இளைய தலைமுறையினர் பிட்ஸா, பர்கர் போன்ற ஆரோக்கியமற்ற உணவு வகைகளுக்கு அடிமையாக உள்ளனர். நமது அட்சயபாத்ரா, இன்றைய தலைமுறையினருக்கு நமது பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து செல்வதே முக்கிய இலக்கு. அனைவரும் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ அட்சயபாத்திரவின் இன்றியமையாத சேவையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மூன்று வேளை பாரம்பரியமான சைவ உணவுகள்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கேற்ப அட்சயபாத்ராவின் மூன்று வேளையும் (காலை, மாலை, இரவு) பாரம்பரிய சைவ உணவுகள் உங்கள் இல்லம் தேடி ஆரோக்கிய உணவு வகைகளை கொடுக்கிறது. நமது பாரம்பரிய சைவ உணவுகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்ட உணவு வகைகள் நமது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவை. நமது அட்சயபாத்ராவின் ஆரோக்கிய உணவை குழந்தை முதல் பெரியவர்கள் வரை எந்த வித தயக்கமும் இல்லாமல் எடுத்து கொள்ளலாம்.
அட்சயபாத்ராவின் காலை வேளை உணவுகள்
அட்சயபாத்ராவின் காலை வேளை உணவு – பிரேக் பாக்ஸ். காலை உணவு இன்றியமையாத ஒன்று. நாம் எடுக்கும் காலை உணவு அன்றைய நாளுக்கான புத்துணர்ச்சியை கொடுக்கிறது.இன்று மக்கள் வேலைக்கு காலில் சக்கரத்தை கட்டி கொண்டு ஓடி கொண்டு இருக்கின்றனர் ஆரோக்கியத்தை மறந்து. பாரம்பரிய சமச்சீரான சைவ உணவுகளான இட்லி, சேவை, வெண் பொங்கல், செட் -தோசை, ஊத்தாப்பம், இடியப்பம், அடை மற்றும் உப்புமா இது போன்ற பல வகை அறுசுவையான உணவுகளை சூடாகவும், சுவையாகவும் உங்களின் இல்லம் தேடி எடுத்து வருகிறோம்.
அட்சயபாத்ராவின் மதிய வேளை உணவுகள்
நமது அட்சயபாத்ராவின் மதிய வேளை உணவுகள் இரு பிரிவுகளாக வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளது. அவை மீல்ஸ் பாக்ஸ், அஞ்சறை பெட்டி. மீல்ஸ் பாக்ஸ் ல் இரண்டு வகையான கலவை சாதங்கள் மற்றும் மூன்று கூட்டு, பொரியல், வறுவல் வகைகளை கொண்டுள்ளது. உதாரணமாக தக்காளி சாதம்,சாம்பார் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், புளியோதரை, வெஜ் பிரியாணி மற்றும் மல்லி சாதம் இவை அனைத்தும் கலவை சாத பிரிவில் உள்ளது. பொரியல் மற்றும் கூட்டு, வறுவல் பிரிவில் காலி ப்ளவர் மசாலா, கேரளா அவியல், வெண்டை புளி கூட்டு, பட்டாணி உருளை வறுவல், கோஸ் கேரட் பொரியல், உருளை பால் கூட்டு, வாழைக்காய் வறுவல், கத்தரி சுண்டல் புளி கூட்டு மற்றும் புடலங்காய் கூட்டு போன்றவை இடம் பெற்று இருக்கும். இந்த மெனு அனைத்தும், மீண்டும் இரண்டு மாதங்களுக்கு பிறகு மட்டுமே வரும்.
அஞ்சறை பெட்டி பிரிவில், சாதம் மற்றும் சாம்பார், பொரியல், வறுவல் உட்பட 9 வகையான உப பிரிவு உணவுகளை கொண்டுள்ளது. உதாரணமாக வெண்டை சாம்பார், வத்தல் புளி குழம்பு, முருங்கை சாம்பார், கத்தரி புளி குழம்பு, முள்ளங்கி சாம்பார், இஞ்சி ரசம், புதினா ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம், பருப்பு ரசம் மற்றும் கொள்ளு ரசம் போன்றவை உள்ளது. மேலும் அட்சயபாத்ராவின் சிறப்பம்சம், இரண்டு மாதங்களுக்கு மீண்டும் இந்த மெனு வருவது கிடையாது.
அட்சயபாத்ராவின் இரவு வேளை உணவுகள்
நமது அவசர வேலைகளின் காரணமாக மற்றும் சூழ்நிலை காரணமாக இரவு உணவு தயார் செய்யும் நேரத்திற்கு சோர்வு நம்மை ஆட்கொண்டு விடும். நீங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்களது வேலைகளுக்கு நடுவில் இரவு உணவுக்கான பதார்த்தங்களை, எந்த வித சிரமமின்றி நாங்கள் எடுத்து வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுக்கு எந்தவித தொந்தரவும் தராத ஆரோக்கியமான அட்சயபாத்ராவின் டின்னர் பாக்ஸ் உங்களை தேடி வரும். இந்த டின்னர் பாக்ஸ் பிரிவில், இரண்டு டிஃபன் வகைகளும் அதற்கு தொட்டு கொள்ள இரண்டு கிரேவி வகைகளும் உள்ளது. உதாரணமாக, இட்லிக்கு புதினா சட்னி, இடியாப்பத்திற்கு பாயா, சிகப்பு அரிசி புட்டுக்கு கடலை கறி, சம்பா கிச்சடி வெங்காய சட்னி, காஞ்சிபுரம் இட்லிக்கு மிளகாய் பூண்டு சட்னி மற்றும் வெஜ் பரோட்டாக்கு வெஜ் சால்னா.
அட்சயபாத்திரவின் சிறப்புகள்
அட்சயபாத்திரவின் தனித்துவமான ஆரோக்கிய சைவ உணவுகள் தயாரிப்பில், நாங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் பல கட்ட பரிசோதனைக்கு பிறகே பயன்படுத்தப்படுகிறது. புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகள், மர செக்கு நல்லெண்ணெய், பாரம்பரிய வீட்டு மசாலா மற்றும் எந்த விதமான செயற்கை சுவையூட்டிகள் சேர்ப்பது இல்லை. முற்றிலும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான சைவ உணவுகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் நங்கள் கவனமாக இருக்கிறோம்.
அட்சயபாத்ராவின் மூன்று வேளையும் பாரம்பரியமான சைவ உணவுகளில் நீங்களும் இணைந்து உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள். என்றும் உங்கள் நலனில் அட்சயபாத்ரா!