Table of Contents
அட்சயபாத்ராவின் அறிமுகம்
இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய வீட்டு சாப்பாடுகளை மறந்து அனைவரும் பாஸ்ட் ஃ புட் உணவுகளை நோக்கி ஈர்க்கப்பட்டு கொண்டு இருக்கிறோம். ‘உணவே மருந்து’எனும் பழமொழிகேற்ப நமது உணவு முறைகளை மாற்றி சுத்தமான மற்றும் சுகாதாரமான உணவுகளை இன்றைய தலைமுறை மக்களுக்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது தான் நமது அட்சயபாத்ரா! மக்களின் நலனில் என்றும் அக்கறையுடன் உணவுகளை உங்களின் வீடு தேடி, நீங்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து தருவது தான் எங்களின் சிறப்பம்சம்.
ருசியான 3 வேளை உணவுகள்
- பிரேக் பாக்ஸ்
- மீல்ஸ் பாக்ஸ்
- அஞ்சறைபெட்டி
- டின்னர் பாக்ஸ்
பிரேக் பாக்ஸ்
- தென்னிந்தியாவின் பாரம்பரிய முறையில் வீட்டு முறையில் சமைக்கப்பட்ட காலை உணவு உங்களின் இல்லம் தேடி வரும்.
- அட்சயபாத்ராவின் காலை உணவின் பிரிவிற்கு பிரேக் பாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. காலை உணவு இன்றியமையாத ஒன்று. நாம் எடுக்கும் காலை உணவு அன்றைய நாளுக்கான புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
- காலை வேளைகளில் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு ஓடும் வேலைக்கு செல்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த பிரேக் பாக்ஸ்.
- பாரம்பரிய சமச்சீரான உணவுகளான இட்லி,வெண் பொங்கல், இடியப்பம், அடை மற்றும் உப்புமா இது போன்ற பல வகையான உணவுகளை சூடாகவும், சுவையாகவும் உங்களின் இல்லம் தேடி எடுத்து வருகிறோம்.
மீல்ஸ் பாக்ஸ்
- மீல்ஸ் பாக்ஸ், தைவானில் இருந்து பிரத்தியேகமாக தயாரித்து கொண்டுவரப்பட்டது
- எங்களிடம் இந்த மதிய உணவின் வகைகள், 30 நாட்களுக்குத் தனிப்பட்ட உணவாகவும் மற்றும் 90 நாட்களுக்குத் தனிப்பட்ட கலவையாகவும் உள்ளது
- இந்த மீல்ஸ் பாக்ஸ் பிரிவில் இரண்டு வகையான கலவை சாதங்கள் மற்றும் மூன்று கூட்டு, பொரியல்ம், வறுவல் வகைகளை கொண்டுள்ளது.
- எடுத்துக்காட்டாக, எங்களின் மெனுவில், ஆந்திரா பருப்பு சாதம், கற்கண்டு பொங்கல், பீன்ஸ் பருப்பு உசிலி, வெண்டை புலி கூட்டு மற்றும் மசால் வடை இது அனைத்தும் ஒரே தொகுப்பாக வரும்.
- இரண்டு மாதங்களுக்கு இந்த மீல்ஸ் பாக்ஸ் மெனு மீண்டும் வருவது கிடையாது.
அஞ்சறைபெட்டி
- தென்னிந்திய பாரம்பரிய வீட்டு சாப்பாடு, மதிய உணவு வகைகளில் நமது தமிழ்நாடு சாப்பாட்டிற்கு தனி இடம் உண்டு.
- அது போல, அட்சயபாத்ராவின் சமையலறையில் இருந்து நமது பாரம்பரிய வீட்டு சாப்பாடு உங்கள் வீடு தேடி வரும்.
- மேலும் நாங்கள் பாரம்பரியமான மண்ணச்சநல்லூர் பொன்னி சாதம், சுத்தமான காய்கறிகள், சுவையான வீட்டுமசாலா மற்றும் கலப்படமற்ற எண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
- அஞ்சறைபெட்டி பிரிவில், சாதம் மற்றும் சாம்பார், பொரியல், வறுவல் உட்பட 9 வகையான உப உணவுகளை கொண்டுள்ளது.
- எடுத்துகாட்டாக, சாதம்,நூக்கல் சாம்பார், தக்காளி ரசம், கத்தரிக்காய் புளி குழம்பு, மோர், மரவள்ளி கிழங்கு வறுவல், கத்திரிக்காய் தால்சா, வடகம் மற்றும் ரவா பாயசம்.
- இது போல பல வகையான உணவு பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். மேலும் எங்களின் தயாரிப்பின் சிறப்பம்சம், இரண்டு மாதங்களுக்கு இந்த அஞ்சறைபெட்டி மெனு மீண்டும் வருவது கிடையாது.
டின்னர் பாக்ஸ்
- அட்சயபாத்ராவின் இரவு உணவு வகையின் மற்றொரு பெயர் டின்னர் பாக்ஸ்.
- இதன் சிறப்பம்சம், மும்பையில் இருந்து ஸ்பெஷலாக தயாரித்து கொண்டுவரப்பட்டது.
- 30 நாட்களுக்கு தனிப்பட்ட கலவையாக மெனு அமைக்கப்பட்டுள்ளது.
- உதாரணத்திற்க்கு, ஆலு சப்பாத்தி, அரிசி புட்டு, கடலை கறி மற்றும் புதினா சட்னி இது ஒரு பட்டியல் ,இது போல மற்றொரு பட்டியல் பீஸ் பரோட்டா, இடியப்பம், வெஜ் பாயா மற்றும் மீல் மேக்கர் கிரேவி.
அட்சயபாத்ராவின் வாக்குறுதிகள்
- அட்சயபாத்ராவின் தனித்துவமான வாக்குறுதிகள் உங்களுக்காக. நாங்கள் சமைப்பதற்கு புதிதாக பறிக்கப்பட்ட பண்ணை காய்கறிகளை பயன்படுத்துவோம்.
- நாங்கள் சமைப்பதற்கு வனஸ்பதி, ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்து இல்லை.
- எங்களின் உணவில் நிறம் மற்றும் சுவை ஏற்றும் பொருட்கள் சேர்ப்பது இல்லை.
- நாங்கள் சமைப்பதற்கு செக்கில் ஆட்டிய கடலை மற்றும் நல்லெண்ணெய் பயன்படுத்துகிறோம்.
- நாங்கள் சமைப்பதற்கு வீட்டில் அரைத்த மசாலாக்களை பயன்படுத்துகிறோம்.
- எங்களின் உணவில் அஜினமோட்டோ மற்றும் பதப்படுத்தபட்ட பொருட்களை சேர்ப்பது இல்லை.
தனித்துவமான உணவுகள்
- அட்சயபாத்ரா தரமான மற்றும் தனித்துவமான பாரம்பரிய சைவ வீட்டு உணவுகளை தருகிறது. அதில் சில, நூக்கல்கூட்டு, சேனைகறி, கோஸ்மசாலா, புதினா உருளை கார கறி, தாளிச்ச சுண்டல், சௌ சௌ புளிக் கூட்டு, பூசணி ரசவாங்கி, கேரட் கோசம்பரி, காளான் ஃப்ரைட் ரைஸ், தக்காளி புதினா சாதம், சாம்பார் வடை, பக்கோடாகூட்டு, சாபுதானா போண்டா, ஹைதராபாதி தம் பிரியாணி மற்றும் சென்னா புலாவ் போன்றவை.
உங்களுக்கு அட்சயபாத்ராவின் பாரம்பரிய வீட்டு சாப்பாடு 3 வேளை உணவு பிரிவுகளான பிரேக் பாக்ஸ், மீல்ஸ் பாக்ஸ், அஞ்சறைபெட்டி மற்றும் டின்னர் பாக்ஸ்ல் எது வேண்டுமோ அதில் இணைந்து உங்களின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்துக்கொள்ளுங்கள். அட்சயபாத்ராவுடன் இணைந்து இருங்கள்.