முகப்பொலிவுக்கு சிறந்த இயற்கை உணவு முளைக்கீரை சாதம்

apf-blog-jan-07-01.jpg

முகப்பொலிவுக்கு சிறந்த இயற்கை உணவு முளைக்கீரை சாதம்

தாவரங்களின் நிறம் பச்சை. இந்த பச்சை நிறம் தான் தாவரங்களை உணவாக கொள்ளும் உயிர்களுக்கு மிகுந்த நன்மைகளை தருகிறது என்பது அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. சாப்பிடும் கீரை வகைகள் பல இந்த பச்சை நிறம் காரணமாக ஏற்படும் சத்துகள் அதிகம் கொண்டதாகும். அப்படிப்பட்ட ஒரு கீரை தான் முளைக்கீரை. இந்த முளைக்கீரை சாப்பிடுவதால் ஒருவருக்கு தன் முகப்பொலிவினை அதிகரிக்க மிகவும் உதவுகிறது.

முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். அதிலும் பெண்கள் முகப்பொலிவாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் நாம் அதனை வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்வதற்கு சரியான நேரமும் கிடைப்பதில்லை.

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் உண்ணும் அனைத்து உணவிலும் ஆரோக்கியமும் பல பயன்களும் இருந்தது ஆனால் இன்றயகாலத்தில் அனைவரும் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சூறாவளி போல சுளன்று வருகிறோம் அதன் பயனாக நமது உடல்நலனுக்காகவும் முகப்பொலிவுக்காகவும் ரசாயன பொருட்களை சேர்ப்பதோடு அதன் பயனாக தேவையில்லாத நோய்களையும் நாமே தேடிக்கொள்கிறோம்.

முளைக்கீரை என்று ஒன்று  இருப்பதே  இன்றைய காலத்தினருக்கு தெரியாது.பின்னர் எப்படி அதன் பயன்கள் புரியும்.அதனால் தான் அட்சயபாத்ரா சைவ உணவு மூலம் உங்கள் இல்லம் தேடி சத்தான  முளைக்கீரை  சாதம் நாங்கள் முன் வந்துள்ளோம்.

முளைக்கீரை சாதம் சாப்பிடுவதால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகத்தில் பலபலப்பை அதிகரிக்கச் செய்கிறது.முக்கியமாக உங்கள் மனதில் கேள்வி எழலாம் ஏன் பிடிக்காத கீரையை சாப்பிட்டுத்தான் முகம் போலிவு பெறவேண்டுமா அதற்குத்தான் ஒரே நாளில் முகம் பொலிவு பெற ஏராளமான அழகு சாதன பொருட்கள் இருக்கிறதே என்று?

ஆம் எத்தனை அழகு சாதனப்பொருட்கள் வந்தாலும் அதெல்லாம் நிரந்தர தீர்வு தராது.அனால்   முளைக்கீரையில் உள்ள மருத்துவ குணம் இயற்கையாக எந்த ஒரு பின் விளைவுகளை ஏற்காமல் நிரந்தர தீர்வு அளிக்கும் நற்குணம் கொண்டது.

இப்படிப்பட்ட நற்குணங்களை கொண்ட முளைக்கீரை சாதம் தரமாகவும் ருசியாகவும் கிடைத்தால் வேண்டாமென்ரா சொல்லுவோம்.

அட்சயபாத்ரா சைவ உணவு யில் சத்தான முளைக்கீரையை நேரடியாக முளைவிப்பவரரிடம் இருந்து வாங்கி அதனை நன்றாக சுத்தம் செய்து.எந்த ஒரு  கலப்படமும் இல்லாமல் நம் வீட்டில் அம்மா நமக்கு அன்பும் அரவணைப்பையும் கொண்டு சமைக்கும் உணவையே மிஞ்சும் அளவிற்கு தரத்திலும் சுவையிலும் எந்த குறையும் இல்லாமல் உங்களுக்கு சரியான நேரத்தில் சுவையான உணவை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றோம் .

முளைக்கீரை சாதத்தின் மேலும் நன்மைகள்:

முளைக்கீரை முகப்பொலிவினை அதிக படுத்துவது மட்டுமின்றி மேலும் பல நன்மைகளைக் கொண்டது. அதன் பயங்களைக் காண்போம்,

மூளை வளர்ச்சி

மூளை வளர்ச்சி முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது. மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது நமது உடலில் ஓடும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவதோடு, இதிலுள்ள மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. எனவே இக்கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.

காய்ச்சல், சளி

காய்ச்சல், சளி சீதோஷண மாற்றங்கள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, சில மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு, தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து, சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சல், சளி  போன்றவை குணமாகும்.

மூலம்

மூலம் எனப்படும் ஆசனவாய் பகுதியில் ஏற்படும் புடைப்பு, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த மூல வியாதியை நீக்க முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு சேர்த்து அதனுடன் சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிடுவதால் உள் மூலம், பௌத்திரக் கட்டி மூலம், ரத்த மூலம் போன்ற பலவகையான மூல நோய்கள் குணமாகும்.

பசியின்மை

ஒவ்வொரு வேளை உணவு உண்டு முடித்ததும் அடுத்த வேளை உணவுக்காக பசி உணர்வு வயிற்றில் ஏற்பட வேண்டும். பசியின்மை ஏற்பட்டிருப்பவர்கள் முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ததுக் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைபாடு தீர்ந்து நல்ல பசி உண்டாக்கும்.

ருசியின்மை

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் சமயம் சிலருக்கு எந்த ஒரு உணவு சாப்பிட்டாலும் நாக்கில் ருசியின்மை உண்டாகும். இந்த பிரச்சனை ஏற்பட்டவர்கள் முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, அவித்துச் சாப்பிட்டு வந்தால் நாக்கில் ஏற்படும் ருசி அறிய முடியாத குறைபாடு நீங்கும்.

ஊட்டச்சத்து

உடல் வளர்ச்சிக்கு தேவையான பல சத்துகள் முளைக்கீரை கொண்டுள்ளது. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாது சத்துகள் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். தங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு முளைக்கீரை சமைத்து சாப்பிட கொடுக்க வேண்டும்.

பித்தம்

உடலில் இருக்கின்ற பித்தத்தின் அளவு அதிகரித்தாலும், குறைந்தாலும் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்தம் அளவு சமசீராக பித்தம் குறைபாடுகளால் ஏற்படும் மயக்கம் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை சீராகும். வயிற்று புண்கள் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அடிக்கடி உணவு சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் வயிறு மற்றும் குடல்களில் புண்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. இப்படி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீர முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண்கள் விரைவில் குணமாகும்.

வயிற்று புண்

வயிற்று புண்கள் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அடிக்கடி உணவு சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் வயிறு மற்றும் குடல்களில் புண்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. இப்படி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீர முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண்கள் விரைவில் குணமாகும்.

தோல் வியாதிகள்

தோல் வியாதிகள் ஏற்பட்டால் பலருக்கும் அது மிகுந்த சங்கடத்தை தருகின்றது. சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் ஏற்பட்டவர்கள் முளைக்கீரையை உண்பதினால் குணமடையும். மேலும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மை ஈரப்பதத்தையும், பலபளப்புப்  தன்மையையும் தருகிறது.

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time

Monday -Saturday: 11.30AM – 1.00PM

Dinner Serve Time

Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.



PRODUCTION UNIT

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.