கோடைகாலத்தில் புத்துணர்ச்சி தரும் உணவுகள்
கோடை காலம் வந்தாலே நாம் அனைவரும் மிகவும் குளிர்ச்சியாக இருக்க விரும்புவோம். எனவே நீங்கள் குளிர்ச்சியாக இருக்க உங்கள் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டியுள்ளது.
வெப்பம் காரணமாக நமது உடலில் அதிக வியர்த்தல் ஏற்படும். இதனால் நமது உடலில் நீரிழிப்பு ஏற்பட்டு உடலில் உள்ள வைட்டமின்கள் குறைவாகும் வாய்ப்புள்ளது. எனவே நாம் அதற்கான உணவுகளை சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும்.
புத்துணர்ச்சி தரும் உணவுகள்
கோடையில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, `டீஹைட்ரேஷன்’’ எனப்படும் உடல் வறட்சி. நம்மில் பலர், இதை தடுக்க கோடைக்காலத்திற்கு என்று சில காய்கறி வகைகள் உண்டு. அவை நமக்கு பல நன்மைகள் தருகின்றன.
- கோடைகாலத்தில் புத்துணர்ச்சி தரும் உணவுகள்: வெள்ளரிக்காய் 90% சதவீதம் நேர்ச்சத்தினை உள்ளடக்கியது. இதில் வைட்டமின் பி, எலெக்ட்ரோலைட்டுகள், மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமுள்ளதால் எளிதில் செரிமானம் ஆகும்.
- கேரட் நம் உடல் முழுவதற்கும் நன்மை தருகின்ற ஓர் காய்கறி. நமது உடலில் உள்ள வறட்சி மற்றும் நச்சுகள் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவுகிறது.
- முட்டைகோஸில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், அதனை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
- குடைமிளகாயில் 90 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளதால், அதனை கோடைகாலத்தில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் இதர சத்துக்களான பொட்டாசியம் அதிகம் உள்ளது.
- பீன்ஸ் நமது இதயத்திற்கும், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்தது. எனவே டயட்டில் இருப்பவர்கள், இந்த காய்கறியை, இந்த கோடை நேரத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
- வெள்ளை மற்றும் சிவப்பு நிற முள்ளங்கியை அதிகம் சாப்பிடுவதால் நமது உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகரிப்பதால் ஆரோக்கியம் பெருகும்.
- தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இது வயிறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது
ஆகவே கோடைகாலத்தில் அதிக அளவில், இத்தகைய காய்கறியை சேர்த்து வந்தால், உடலை வறட்சியின்றி ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். எனவே ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். Visit us Atchayapathra Foods