அசத்தும் அசைவ உணவுகளின் சைவ மாற்றீடு

apf_Blog.jpg

வாழ்வதற்காக உண் என்ற கூற்றிற்கு ஏற்ப அனைவரும் உணவை நேரத்திற்கும் ஆரோக்கியத்திற்காகவும் உண்பார்கள். அதில் சிலர் ருசித்து உண்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களில் பலர் அசைவ உணவை அதிகம் விரும்பி உண்பவர்களாக இருப்பார்கள். அசைவம் உண்ணாதவர்கள் கூட ஒரு முறையாது வாழ்வில் அதை ருசித்து பார்க்க வேண்டும் என விருப்பப்படுவார்கள். இன்றய காலங்களில் பெரும்பாலான நடுவயதினர்கள் மற்றும் முதியவர்கள் தங்களின் உடல் நலனை கருதி அசைவ உணவை எடுத்துக்கொள்ள முடியாமல் கவலை கொள்கின்றார்கள். இதோ அவர்களுக்காக அசைவம் போன்ற சுவை தரும் ஆரோக்கியமான சைவ உணவுகள். சுவையான மற்றும் சத்தான சில அசைவ சுவைப்போன்ற சைவ உணவுகளின் செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


  • சைவ ஆம்லெட்
  • சைவ ஈரல்
  • சோயா லாலிபாப்
  • பலா கறி கூட்டு
  • வெஜ் ஃபிஷ் ஃபிங்கர்

1. சைவ ஆம்லெட்


veg omelette


முட்டை இல்லா சைவ ஆம்லெட் பல்வேறு சத்தான காய்கறிகளை உண்பதற்கு ஓர் நல்ல அனுபவத்தை தருகிறது. இந்த உணவு பல்வேறு காய்கறிகளை கொண்டுள்ளதால் சுவையான உணவாகவும் சத்தான உணவாகவும் இருக்கிறது.



தேவைப்படும் பொருட்கள்:


  • கடலை மாவு
  • மைதா மாவு
  • நறுக்கிய வெங்காயம்
  • கொத்தமல்லி இலை
  • பச்சை மிளகாய்
  • வெண்ணை
  • மிளகு
  • உப்பு

செய்முறை:



    • 1. முதலில் கடலை மாவையும் மைதா மாவையும் ஊற்றும் தன்மை வருமளவிற்கு தண்ணீர் கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
    • 2. அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து அதனை நன்றாக கலக்கவும்.
    • 3. அனைத்து கலவைகளும் நன்றாக கலந்த பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவேண்டும். வேண்டுமானால் தங்களின் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.
    • 4. அனைத்து கலவைகளும் நிறைந்த மாவு தயாரான பின்பு தோசை தவாவில் எண்ணெய்க்கு பதிலாக சிறிது வெண்ணை விட்டு அதனை தவாவில் பரவி விட்டு தயாரித்து வைத்துள்ள மாவை தவாவில் ஊற்ற வேண்டும். காரசாரமாக சாப்பிட விருப்பப்படுபவர்கள் என்றால் மாவுடன் மிளகு அல்லது மிளகு தூளை சேர்க்கவும்.
    • 5. இரண்டு நிமிடத்தில் சுவையான முட்டை இல்லா ஆம்லெட் தயார்.


2. சைவ ஈரல்


Saiva Eeral


சைவ உணவில் அசைவ உணவின் சுவை காண, சைவ ஈரல் ஒரு மிகச்சரியயன உணவு. சைவ ஈரல் என்ற பெயரிலே அசைவத்தின் வார்த்தை உள்ளது. அனால் இது முழுமையாக சைவ பொருட்களால் தயாரிக்கப்பட்டது.



தேவைப்படும் பொருட்கள்:


  • பச்சை பாசி பயறு
  • நன்று நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் தக்காளி
  • கறிவேப்பிலை
  • மிளகாய் தூள்
  • மல்லி தூள்
  • மஞ்ச தூள்
  • கரம் மசாலா தூள்
  • மிளகு தூள்
  • தேங்காய் பால்
  • சீரகம்
  • கொத்தமல்லி
  • எண்ணெய்
  • உப்பு

செய்முறை:



    • 1. தேவையான அளவு பாசி பயறை நன்கு தண்ணீரில் அலசி விட்ட பின்பு இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்பு ஊற வைத்த தண்ணீரை வடித்து விட்டு தேவைப்படும் அளவிற்கு உப்பு சேர்த்து இட்லி மாவின் பதம் வருமளவிற்கு நன்றாக அரைக்கவும்.
    • 2. தயாரித்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் ஊற்றி அதனை பதினைந்து நிமிடத்திற்கு நன்றாக வேகவைக்கவும்
    • 3. பின்பு பச்சை பயறு இட்லி தயாரானவுடன் அதை சதுர வடிவங்களில் நறுக்கவும் . சுத்தமான சைவ ஈரல் சமைப்பதற்கு தயாராகிவிட்டது.
    • 4. அதன் பின்பு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பிற்கு தேவையான பொருட்களை சேர்க்கவும். வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை எல்லாம் நன்கு வதங்கிய பின்பு மீண்டும் தேவைப்படும் அளவிற்கு உப்பு சேர்க்கவும்.
    • 5. அதனுடன் மிளகாய் தூள்,மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், தேங்காய் பால் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
    • 6. தேங்காய் பால் கொதி வரும் நிலையில் நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை அதனுடன் சேர்க்கவும். தற்போது சைவ ஈரல் வடிநீர் பதம் கிடைத்து விடும்.
    • 7. வடிநீராக இருப்பதை மேலும் நன்கு கொதிக்க வைத்தால் அது வற்றி ஈரல் போன்ற சுவை தரும். இறுதியாக நல்ல மணத்திற்க்கு கொத்தமல்லி இலை தூவி இரக்கவும். இப்பொழுது சுவையான சைவ ஈரல் தயார்.


3. சோயா லாலிபாப்


Soya Lollipop


இயல்பாகவே, எல்லோரும் மீல் மேக்கரை விருப்பத்துடன் உண்பார்கள். இதில் சோயா லாலிபாப் என்பது ஒரு வித்தியாசமான மிகவும் சுவையான உணவு, அதைபோல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஓர் உணவு.



தேவைப்படும் பொருட்கள்:


  • மீல்மேக்கர்
  • வேகவைத்த உருளைக்கிழங்கு
  • குடை மிளகாய்
  • வெங்காயம்
  • பச்சை பட்டாணி
  • மிளகாய் தூள்
  • கரம் மசாலா
  • மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி இலை
  • வேர்க்கடலை
  • பொறி கடலை
  • எண்ணெய்
  • உப்பு

செய்முறை:



    • 1. முதலில் மீல்மேக்கரை தண்ணீரில் வேகவைத்து பின்பு அதன் தண்ணீரை வடித்து உலர வைக்கவும்.
    • 2. பின்பு வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
    • 3. அதே நேரத்தில் பொறிகடலை மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை நன்கு பொடியாகும்வரை அரைத்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
    • 4. பின்பு மீல்மேக்கரை அரைத்து தயாரித்து வைக்கப்பட்டுள்ள மாவுடன் சேர்க்க வேண்டும்.
    • 5. அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
    • 6. தற்போது கலக்கி வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து எண்ணையில் பொறித்து எடுக்க வேண்டும்.
    • 7. பொறித்தெடுக்கப்பட்ட உருண்டைகளை காகிதத்தில் வைத்து எண்ணை வடிந்த பின்பு பல்குத்தி போன்ற குச்சிகளில் பொறித்தெடுக்கப்பட்ட உருண்டைகளை நுழைத்து சுவையான சோயா லாலிபாப்பை பரிமாறவும்.


4. பலா கறி கூட்டு


Palaakari


இயற்கையிலேயே பலா கறி, ஆட்டு இறைச்சியின் சுவை தரும் ஓர் உணவு. முழுமையாக பழுக்காமலும் முழுமையான காயாகவும் இல்லாமல் நடுநிலையில் உள்ள ஓர் பலா காயில் இந்த உணவை தயாரித்தால் அது மிகவும் சுவை தரும் உணவாக இருக்கும்.



தேவைப்படும் பொருட்கள்:


  • தோல் அகற்றிய பலாக்காய்
  • வெங்காயம்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கொத்தமல்லி
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • பெருஞ்சீரகம்
  • இலவங்கப்பட்டை
  • பூண்டு
  • துருவிய தேங்காய்
  • எண்ணெய்
  • உப்பு

செய்முறை:



    • 1. தோல் அகற்றிய பலாக்காயை விருப்பத்திற்கேற்ப நறுக்கி கொள்ள வேண்டும். அடுப்பை மெதுவாக எரித்தவாறு ஓர் கடாயில் வெங்காயம், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து அதனை நன்றாக வதக்கி பதினைந்து நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
    • 2. அவ்வாறே மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்ட வத்தல், பெருஞ்சீரகம், மல்லி விதைகள், இலவங்கப்பட்டை, பூண்டு, துருவிய தேங்காய் போன்றவற்றை சேர்த்து பொன்னிறத்தோடு நறுமணம் கிடைக்கும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.
    • 3. எல்லாம் வதங்கிய பின்பு விழுது போல் அதனை நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு கொதித்து கொண்டிருந்த பலாக்காயின் தண்ணீர் அளவு குறைந்தவுடன் தயாரித்து வைத்துள்ள விழுதை அதனுடன் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
    • 4. இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
    • 5. நன்கு கொதித்து கெட்டியான பதத்தை அடைந்தவுடன், ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் தயார் நிலையில் உள்ள பலாக்காயை அதனுடன் சேர்க்க வேண்டும்.
    • 6. தற்போது சுவையான மற்றும் சத்தான பலாக்கறி கூட்டு சுவைப்பதற்கு தயார்.


5. வெஜ் ஃபிஷ் ஃபிங்கர்


Fish Finger


இந்த உணவு மீன் சுவைப்பதை போன்ற உணர்வை தரக்கூடியது. அதுமட்டுமல்லாமல் இது கால்சியம் சத்து நிறைந்த ஓர் உணவாகும். உண்பதற்கு மிகவும் சுவை தரக்கூடிய ஓர் உணவும் ஆகும்.



தேவைப்படும் பொருட்கள்:


  • உலரவைத்த பன்னீர்
  • எலுமிச்சை சாறு
  • நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு
  • ஆலிவ் எண்ணெய்
  • உப்பு
  • மைதா
  • சோயா பால்
  • ரொட்டித்தூள்
  • எண்ணெய்

வெஜ் சாஸ் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:


  • சோயா சாஸ்
  • நல்லெண்ணெய்
  • சோள மாவு

செய்முறை:



    • 1. முதலில் வெஜ் சாஸ் தயாரிப்பதற்கு, சோயா சாஸ், நல்லெண்ணெய், சோள மாவு மூன்றையும் மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து நன்றாக குலுக்கவும். பின்பு அதனை ஐந்து நிமிடத்திற்கு கெட்டி பதம் வரும் அளவிற்கு வேக வைக்கவும். இப்பொழுது சுவையான வெஜ் சாஸ் தயார்.
    • 2. நீல சதுர வடிவத்தில் பன்னீரை நறுக்கி வைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தயாரித்து வைத்துள்ள வெஜ் சாஸ், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், பூண்டு, இஞ்சி, உப்பு, தண்ணீர் ஆகிவற்றை நன்றாக கலக்கவும்.
    • 3. இந்த கலவை நறுக்கி வைத்துள்ள பன்னீருக்கு ஏற்ற மேல்பூச்சாக இருக்க வேண்டும். பின்பு பன்னீரை இந்த கலவையுடன் சேர்த்து அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இப்பொழுது அந்த கலவை பன்னீருடன் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.
    • 4. மைதா மாவு, சோயா பால், ரொட்டி தூள் ஆகியவற்றை மூன்று தனி தனி பாத்திரங்களில் எடுத்து கொண்டு ஒவ்வொன்றிலும் பன்னீரை நன்கு பிரட்டவும். இதனால் பன்னீர் பொறித்தபின் மொறு மொறுப்பு சுவை தரும்.
    • 5. ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் உள்ள பன்னீரை பொறிக்கவும்.
    • 6. பன்னீரை மூன்று நிமிடம் நன்றாக பொறிக்கவும்.
      • 7. இப்பொழுது சுவையான வெஜ் ஃபிஷ் ஃபிங்கர் சுவைப்பதற்கு தயார். Visit us

    Atchayapathra Foods



CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.