ஆரோக்கிய வாழ்விற்கு அட்சயபாத்ராவின் பாரம்பரிய சைவ உணவுகள்

APF-BLOG30.07.2021.jpg

ஆரோக்கிய வாழ்விற்கு அட்சயபாத்ராவின் பாரம்பரிய சைவ உணவுகள்

அட்சயபாத்ராவின் பாரம்பரிய சைவ உணவுகள்

இன்றைய காலக்கட்டத்தில் பாரம்பரிய சைவ உணவுகள் என்றால் நினைவுக்கு  வருவது கூழ் ,கேழ்வரகு களி போன்றவை மட்டுமே !!! அதையும் தாண்டி நமது பாரம்பரிய உணவு வகைகள் பல உள்ளன. அந்த பழமை மாறாத பாரம்பரிய உணவு வகைகளை உங்களிடம் கொண்டு சேர்க்கவே அட்சயபாத்ரா தொடங்கப்பட்டுள்ளது. எத்தனை வகையான மேற்க்கத்திய உணவு வகைகள் இருந்தாலும் நமது பாரம்பரிய உணவு ருசிக்கு ஈடாகாது.

ஏன் அட்சயபாத்ரா?

இயற்கையான மற்றும் பாரம்பரிய சைவ உணவுகளை, அன்று பறிக்கப்பட்ட காய்கறிகளாலும், புதிதாக கைகளால் அரைத்து வைத்த மசாலாக்களாலும் தயார் செய்யப்படுகிறது.அதுமட்டும் அல்லாமல் எங்களின் தயாரிப்புகளில் எந்த விதமான செயற்கை வேதி பொருட்களையும் நாங்கள் பயன்படுத்துவது இல்லை. உடல் ஆரோக்யத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களையும் நாங்கள் சேர்ப்பது இல்லை.

எங்களின் அரிசி

அரிசி, இல்லாமல் நமது பாரம்பரிய உணவு வகைகள் இல்லை. அதிலும் எங்களின் கூடுதல் சிறப்பம்சம், எங்கள் நிலத்தில் விளைந்த  நெல் வகைகளை, எங்களின் அரிசி தொழிற்சாலையில் அரைத்து எங்களின் சேமிப்பு கிடங்கில் உள்ளது. எங்களின் கைப்பக்குவத்தில் இந்த மூலப்பொருட்கள் உருவாவதால் எங்களின் தயாரிப்பிற்கு  ஒரு தனி ருசி உண்டு. அந்த கால உணவுகளின் ருசியை, இந்த இளைய தலைமுறை மக்களுக்கு எடுத்து செல்வதில் எங்களுக்கு பெருமை.

இயற்கை தோட்ட காய்கறிகள்

எங்களின் உணவு வகைகளில், நாங்கள் அன்று புதிதாக பறிக்கப்பட்ட காய்கறி மற்றும் கீரை வகைகள் பயன்படுத்தப்படுகிறது. எந்த செயற்கை உரம் சேர்த்து விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் கீரை வகைகளை நங்கள் பயன்படுத்துவது இல்லை.உடலுக்கு நன்மை விளைவிக்கும் கொத்தவரங்காய்,புடலங்காய்,சௌசௌ,பீர்க்கங்காய்,பரங்கிக்காய்,வெண்டைக்காய்,சேனைக்கிழங்கு,தண்டங்கீரை மற்றும் புதினா,கருவேப்பிலை சேர்த்து சமைக்கப்படுகிறது.

பாரம்பரிய வீட்டு மசாலா

எங்களின் அட்சயபாத்ராவில் பாரம்பரிய முறையில் அரைக்கப்பட்ட வீட்டு மசாலாக்கள் பயன்படுத்தப்படுகிறது. சுத்தமாக அரைக்கப்பட்ட சாம்பார் மசாலா,குழம்பு மசாலா மற்றும் தனித்தனியாக அரைக்கப்பட்ட மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,மல்லித்தூள் மற்றும் கரம்மசாலாதூள் வகைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்களின் பிரத்யேக தயாரிப்பு மசாலாக்களை பயன்படுத்தி சமைப்பதால் உணவின் தரம் உயர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் சத்தாகவும்,சுகாதாரமாகவும் உள்ளது.

சுகாதாரமான செக்கு எண்ணெய்

எங்களின் உணவு வகைகளில், நாங்கள் சுத்தமான மற்றும் உடலுக்கு நன்மை வளைவிக்கக்கூடிய செக்கு கடலை மற்றும் நல்லெண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம்.ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை நாங்கள் மறுமுறை பயன்படுத்துவது இல்லை. சுகாதாரமான செக்கு எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதில் நாங்கள் சமரசம் செய்வது இல்லை. வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்.

செயற்கை வேதி பொருட்களுக்கு தடா!

ஆம்! எங்களின் தயாரிப்பு வகைகளில், நாங்கள் செயற்கை வேதி பொருட்களை சேர்ப்பது இல்லை. முக்கியமாக வனஸ்பதி, செயற்கை நிறமூட்டிகள் மற்றும் செயற்கை மணமூட்டிகள் சேர்ப்பது இல்லை. பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தும் எந்த பொருட்களையும் நங்கள் சேர்ப்பது இல்லை. குறிப்பாக,எங்களின் உணவு வகைகளில் அஜினமோட்டோ சேர்ப்பது இல்லை. இதுவே எங்களை தனித்துவமான தயாரிப்புகள் ஆகும்.

பாரம்பரிய சிறுதானிய உணவுகள்

எங்களின் தயாரிப்பு வகைகளில், சிறுதானிய உணவு வகைகளுக்கு தனித்துவமான இடமுண்டு. குறிப்பாக, எங்களின் உணவு வகைகளில் தினைஅரிசிகொள்ளுசாதம், உளுந்து சாதம், புதினா சாதம், கீழாநெல்லி சாதம், வாழைத்தண்டு சாதம், அருகம்புல் சாதம் மற்றும் தூதுவளை ரசம் இது போன்ற ஏராளமான உணவுகள் உண்டு.

சூடான மற்றும் சுவையான உணவு!

ஆவி பறக்கும் இட்லியோ! இல்லை ஆவி பறக்கும் சாதமோ!, எங்களின் அடுப்படியில் இருந்து உங்களின் தட்டுகளில்  நொடி நேரத்தில் வந்தடையும். உணவு சூடாகவும் அதே நேரத்தில் சுவையும் குறையாமல் உங்கள் இல்லத்திற்கு கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அட்சயபாத்ராவின் ஆரோக்கியமான பாரம்பரிய சைவ உணவு அன்றாட வாழ்வில் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுவீர்.என்றும் உங்கள் நலனில் அட்சயபாத்ரா.

 

 

 

 

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time

Monday -Saturday: 11.30AM – 1.00PM

Dinner Serve Time

Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.



PRODUCTION UNIT

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.