Table of Contents
வேர்க்கடலை சாதத்தில் இவ்வளவு நன்மைகளா?
தமிழர்களின் உணவில் வேர்க்கடலை இன்றியமையாதது, அதை நாம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு வடிவில் சாப்பிடுகிறோம். பாரம்பரிய உணவு வகைகளில் இது தனித்துவமானது.
ஆனால் இன்று அது வெறும் சட்னிக்கான உணவுப் பொருளாக மட்டுமே பெரும்பாலான வீடுகளில் பயன்படுகிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய அளவு இன்று நாம் பயன்படுத்துவதில்லை. வேர்க்கடலையில் நம் நினைத்து பார்க்காத அளவுக்கு சத்துக்கள் நிரம்பியுள்ளன.
உடனே உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? வேர்க்கடலையில் சட்னி, துவையல் தவிர வேறு என்ன இருக்கும் என்று?
வேர்க்கடலையில் சாதமே இருக்கிறது ஒரு முறை எங்கள் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில் சுவைத்தாள் நீங்கள் மீண்டும் அதை சாப்பிட ஆசை கொள்வீர்கள்!!
உடலுக்கு அவசியமான இரும்பு, வைட்டமின், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் மட்டும் அல்ல வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் அவசியம் இதை ருசிக்கலாம். அனைவருக்கும் இந்த வேர்க்கடலை சாதம் பிடிக்கும்.
சரி இப்பொழுது வேர்க்கடலையின் பயணம் பற்றி பார்ப்போமா?
நிலக்கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலை, 19 ஆம் நூற்றாண்டில் அறியப்பட்டு நம் நாட்டில் ஒரு முக்கிய பயிராக மாறியுள்ளது. மேலும் உலகிலேயே அதிக அளவில் வேர்க்கடலை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
ஆனால் தற்போது வேர்க்கடலையின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது, நம் முன்னோர்கள் வேர்க்கடலையின் மகத்துவம் அறிந்து அன்றாட உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தினார்கள். இனி நாம் மீண்டும் வேர்க்கடலையின் சுவை மற்றும் சத்துக்கள் அறிந்து நாமும் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நிலக்கடலையும் அதன் சத்துக்களும்!
நிலக்கடலையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் ஏராளமாக உள்ளன. நிலக்கடலையில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பி வைட்டமின்கள் அபரிமிதமாக உள்ளன, இது ஆற்றல் நிறைந்த ஆதாரமாக உள்ளது.
புரதம் மற்றும் நார்ச்சத்து:
பல ஆய்வுகளில் இது உடல் எடையை சரியாக வைக்கிறது என்கிறார்கள். எவ்வாறு என்றல் உடல் பருமனாக இருப்பவர்கள் கூட நிலக்கடலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் கேட்ட கொழுப்பு இல்லை இது உடலுக்கு நல்ல சக்தியையும் சரியான அளவு கலோரிகள்ளையம் கொடுக்கிறது.
Did You Know….? Peanuts Nutrition Facts
- Calorie 826
- Cholesterol 0mg
- Carbs 23.5g
- Potassium 1029.3 mg
- Calcium 134.3 mg
- Protein 37.7g
ஊட்டச்சத்துக்கள்
வேர்க்கடலையில் வைட்டமின்கள், ஃபோலேட், பாந்தோதெனிக் அமிலம், கோலின், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
நோய் கட்டுப்பாடு
நம் உணவு பட்டியலில் வேர்க்கடலை உணவை சேர்ப்பதன் மூலம் இதய நோய்கள் குறைவதோடு, சர்க்கரை நோய், பித்தப்பை நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால்
அதிக கொலஸ்ட்ரால் கொண்ட மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, அவர்களின் கொலஸ்ட்ரால்லாய் மேம்படுத்துகிறது மேலும் வேர்க்கடலையில் உள்ள பைட்டோஸ்டெரால்கள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
8 வேர்க்கடலையின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்!
-
ஆரோக்கியமான இதயம்
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான சத்துக்கள் வேர்க்கடலையில் உள்ளன. அவற்றில் மெக்னீசியம் மற்றும் செம்பு உள்ளது, இதனால் இதயம் வலுப்பெறுகிறது மேலும் இதய திசுக்கலாய் உறுதிப்படுத்துகிறது.
2. மூளையை சக்தியை கூர்மையாக்கும்
ஆரோக்கியமான மற்றும் கூர்மையான மூளைக்கு, வைட்டமின் பி1, நியாசின் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் தேவை. நீங்கள் வேர்க்கடலை சாப்பிடும் போது உங்கள் உடல் இந்த சத்துக்களால் எரிபொருளாகிறது. இதன் விளைவாக, உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாகவும் கூர்மையாகவும் ஆகும்.
3. வலுவான எலும்புகள்
வயதானால் நம் உடலில் இருக்கும் பல எலும்புகள் பலவீனமடைகின்றன, எனவே எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அவசியம். அதன் வலிமையை இழக்கத் தொடங்கும் முன், அதற்க்கு தேவையான ஊட்டத்துக்கள் வேண்டும். அது நிறைந்த வேர்க்கடலையை எடுத்துக்கொள்ளலாம்.
4. பளபளக்கும் தோல்
வேர்க்கடலையில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன, அவை சருமத்தை தெளிவுபடுத்துவது மட்டுமல்லாமல், சருமத்தில் மந்தமானதாக தோற்றமளிக்கும் நச்சுகளை கட்டுப்படுத்தி, சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற வயதான தோற்றம் வராமல் தோலுக்கு தேவையான சத்துக்கள் கொடுத்து பளபளப்பாக்கும்.
5. பார்வையை மேம்படுத்துகிறது
கண் ஆரோக்கியத்தை பராமரிக்கும் போது, பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வேர்க்கடலை ஆகியவை எடுத்துக்கொள்ள சொல்வார்கள் ஏனெனில் அதில் துத்தநாகம் தெளிவான பார்வைக்குத் தேவையான வைட்டமின் A உள்ளது.
6.புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது
வேர்க்கடலை சாப்பிட்டால் புற்று நோய் வருவதைக் குறைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேர்க்கடலை சாப்பிட்டால் புற்று நோய் வருவதைக் குறைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வேர்க்கடலையில் சிறந்த அளவு புரதம் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது, எனவே அவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய இரெசுவரட்ரால் உள்ளது.
7. நீரிழிவு நோய்க்கு உகந்தது
வேர்க்கடலையில் சர்க்கரையின் உள்ளடக்கம் இல்லாததால், நீரிழிவு நோயாளிகளுக்கு அவை முற்றிலும் பாதுகாப்பானவை. அவை ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரங்கள் மற்றும் அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும்.
8. பித்தப்பைக் கல்லைத் தடுக்கிறது
ஆண்டுக்கு 25% பெரியவர்கள் பித்தப்பைக் கல்லால் பாதிக்கப்படுகின்றனர். இது கட்டுப்பாடற்ற கொலஸ்ட்ரால் அளவுகளால் ஏற்படும் நோய். வேர்க்கடலை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் என்பதால், இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் பித்தப்பையில் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
இவ்வளவு நன்மைகளா? என்று யோசிக்கிறீர்களா!
ஆம், இவ்வளவு நன்மைகள் உள்ள உணவை நாம் இதனை நாள் தவிர்த்துள்ளோம்.
வருத்தப்படாதீர்கள்!!
இனி அந்த கவலை வேண்டாம் உங்கள் அட்சயபாத்ரா ஃபுட்ஸ் சந்தா மூலம் (Homemade Food delivery at Subscription Basis) வேர்க்கடலை சாதம் போன்ற பல சத்து நிறைந்த உணவை சாப்பிடலாம்.
தினமும் ஒரு புது சுவை நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில்
தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரியமான உணவு பட்டியல்( Unique Food Menu List) நம்மிடம் உள்ளது. அதில் ஆரோக்கியம் நிரம்பியுள்ளது.