வெந்தய சாதத்தின் அற்புதமான நன்மைகள்- அட்சயபாத்ரா ஃபுட்ஸ்

APF-blog-Dec-1.jpg

வெந்தய சாதத்தின்  அற்புதமான நன்மைகள்

 

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்:

  • வெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பலவகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. வெந்தய சாதத்தின் அற்புதமான நன்மைகள் வெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கும். ரத்த விருத்திக்கு உதவும்.
  • உடல் மெலிந்தவர்கள் புஷ்டியாக வேண்டும் என்றால், தினமும் உணவில் வெந்தயம் சேர்த்துக் கொண்டால் உடல் நன்றாகத் தேறி வரும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
  • வெந்தயத்தில் இயல்பாக இருக்கும் கசப்புத்தன்மை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. வெந்தயக் கீரை மிகச் சிறந்த மலமிளக்கி. தொடர்ந்து வெந்தயத்தை உணவில் சேர்த்து வர அது மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்கும். மூலவியாதி இருப்பவர்களுக்கு வெந்தயம் வரப்பிரசாதம். ரத்த மூலம் இருப்பவர்களுக்கும் இது பயன்படும்.
  • வெந்தயம் சிறந்த உள் மருந்து மட்டுமல்ல சருமத்துக்கும் தலைமுடிக்கும் ஆரோக்கியம் தர வல்லது. தலைமுடி வேர்களுக்கு பலம் அளிக்கும். சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து அதன்பின் தலைமுடியில் தேய்த்து கால் மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்கலாம். உடல் சூடு நன்றாக தணிந்து, கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
  • மாத்திரை விழுங்குவது போல சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம். வெந்தயத்தைப் பொடிசெய்து வைத்து, தினமும் மோரில் சிறிதளவு உப்புடன் கலந்து குடிக்கலாம்.
  • வெந்தயத்தை 8 மணிநேரம் ஊறவைத்து, அதைபருத்தி துணியில் மூடிவைத்து பின் மீண்டும் சிலமணி நேரம் விட்டுவிட அது நன்றாக முளைகட்டி விடும். முளைகட்டிய வெந்தயத்தை அரைத்து கஞ்சி காய்ச்சி வெல்லம் சேர்த்து பருக, ருசியாக இருப்பதுடன், உடல்வலி, சோர்வு எல்லாம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

வெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!

வெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க  கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால் உங்கள் உணவிற்கு சுவையேறும். குழம்புகள், காய்கறி கூட்டுகள், பருப்பு வகைகள் மற்றும் மேத்தி பரோட்டாவில் இது முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

குழந்தை பிரசவிப்பதை சுலபமாக்கும்

Pregnant_Woman
Pregnant_Woman

குழந்தை பிரசவிப்பதை சுலபமாக்கும் கருப்பைக்குரிய சுருங்குதலை ஊக்குவிக்க வெந்தயம் உதவுவதால், குழந்தை பிறப்பை அது தூண்டும். பிரசவ வழியை குறைக்கவும் இது உதவும். ஆனால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை – கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படுமஅபாயம் உள்ளது.

பெண்களின் உடல்நல பிரச்சனைகளை குறைக்கும்

girl sick

பெண்களின் உடல்நல பிரச்சனைகளை குறைக்கும் வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்களுடன், டையோஸ்ஜெனின் மற்றும் ஐசோஃப்ளேவோன்ஸ் போன்ற பொருட்கள் உள்ளதால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் தாக்கீடுடன் சம்பந்தப்பட்ட வலிகள் மற்றும் உபாதைகளை குறைக்க இது உதவும். மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். முதன் முதலில் மாதவிடாய் ஏற்படும் பருவத்தில், கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இந்நேரத்தில் உங்கள் உணவில் வெந்தய இலைகளை ,வெந்தய சாதத்தின்  அற்புதமான நன்மைகள்சேர்த்துக் கொண்டால், போதிய அளவிலான இரும்புச்சத்து கிடைக்கும். ஆனால் அதனுடன் உருளைக்கிழங்குகள் அல்லது தக்காளிகளை சேர்த்து கொண்டால் தான் இரும்புச்சத்து உறிஞ்சுதல் மேம்படும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்

cholesterol
cholesterol

கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆய்வுகளின் படி, கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக ஐது கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது.

இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும்

heart-attack-or-heartach
heart-attack-or-heartache

இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும் வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். மேலும் இதில் வளமையான அளவில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த இது உதவும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

diabetes
diabetes

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெந்தயம் பெரிதும் உதவுகிறது. இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்து வெந்தயத்தில் உள்ளதால், சர்க்கரையை இரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும். வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின்
செரிமானத்தை ஊக்குவிக்கும் உடலிலுள்ள தீமையான நச்சுக்களை வெளியேற்ற வெந்தயம் உதவுகிறது. இது செரிமானமின்மையை நீக்கி, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும்.

நெஞ்செரிச்சலுக்கு தீர்வு

Heartburn-
Heartburn

நெஞ்செரிச்சலுக்கு தீர்வு உணவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால், அதிகப்படியான அமிலப் பாய்ச்சல் அல்லது நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். உங்கள் வயிற்று அக உறை மற்றும் குடலில், வெந்தயத்தின் பசைப் பொருள் சூழ்ந்து கொள்வதால், எரிச்சலை உண்டாக்கும் இரையக குடலிய தசைகளை இதமாக்கும். அதனை உட்கொள்வதற்கு முன்பாக, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தால், அதன் வெளிப்புறம் பசைத்தன்மையை பெறும்

காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சலுக்கு நிவாரணம்

fever and cough
fever and cough

காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சலுக்கு நிவாரணம் வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் கலந்து பருகினால், உங்கள் காய்ச்சலை குறைத்து, உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். இதமாக்கும் குணத்தை கொண்ட வெந்தயத்தின் பசைப்பொருள், இருமல் மற்றும் தொண்டை எரிச்சலையும் நீக்கும்.

பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும்

colon- cancer
colon- cancer

பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து (சபோனின்ஸ், பசைப்பொருள் போன்றவைகள்) உங்கள் உணவுகளில் இருந்து உள்ளேறிய நச்சுத்தன்மையை, உங்கள் உடலில் இருந்து வெளியேற்றும். இது உங்கள் பெருங்குடலின் சீதப்படலத்தை புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

 

பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கச் செய்யும்

Weight-Loss-Success
Weight-Loss-Success

பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கச் செய்யும் உடல் எடை குறைக்கும் டயட்டில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் படி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை மெல்லுங்கள். அதிலுள்ள இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்துக்கள், உங்கள் பசியை அடக்கிவிடும்.

 

சரும அலர்ஜி மற்றும் தழும்புகளுக்கான தீர்வு

skin alergy
skin alergy

சரும அலர்ஜி மற்றும் தழும்புகளுக்கான தீர்வு ஊற வைத்த சுத்தமான வெந்தயத்தில் இருந்து செய்யப்பட்ட பேஸ்ட்டை சரும சிகிச்சைகளுக்கு பயன்படுத்துங்கள். அதில் தீக்காயம், கொப்பளம், சரும படை போன்ற பிரச்சனைகள் அடக்கம். மேலும் தழும்புகளை நீக்கவும் வெந்தயம் உதவுகிறது.

 

அழகு சாதனம் வீட்டிலேயே தயார் செய்யும்

beauty tips
beauty tips

அழகு சாதனம் வீட்டிலேயே தயார் செய்யும் அழகு சாதனமாக வெந்தயத்தை பயன்படுத்தலாம். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, உங்கள் சருமத்தில் பல அதிசயங்கள் அரங்கேறும்.

தலைமுடி பிரச்சனைகளுக்கான தீர்வு

hair problems
hair problems

தலைமுடி பிரச்சனைகளுக்கான தீர்வு வெந்தயத்தை உணவோடு சேர்த்து கொண்டாலும் சரி அல்லது அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவிக் கொண்டாலும் சரி, உங்கள் தலைமுடியை பளபளவென கருமையாக்கும். தினமும் இரவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த வெந்தயத்தை கொண்டு, மறுநாள் காலை தலையில் மசாஜ் செய்தால், முடி உதிர்தலுக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். இன்னும் என்ன? பொடுகை விரட்டவும் வெந்தயம் பெரிதும் உதவும்.

எனவே, அனைவரும் நம் அட்சயபாத்ரா உணவை உட்கொண்டு  வெந்தய சாதத்தின்  பயன்களை அனுபவிக்க வேண்டும்எங்கள் நோக்கம் !! உங்கள் ஆரோக்கியம் !!

  •   எங்கள் கவனம் உங்கள் ஆரோக்கியம். உங்களுக்கு எது நல்லது என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறோம். எங்களின் பரந்த அளவிலான மெனுவிலிருந்து உங்கள் ஆரோக்கிய நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான உணவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தரமான சிறந்த சைவ உணவு விநியோகத்தை உறுதி செய்வதற்காக அனைத்து இயற்கை பொருட்களையும் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்புகள் இல்லை. புதிய, சுவையான ஆரோக்கியமான, பிரீமியம் தரமான உணவுகள்

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.